செய்யப்பட்ட இரண்டு மணிகளைத் தனது காதில் தொங்கவிட்டு, எந்நேரமும் அது ஒலித்துக் கொண்டே இருக்கும்படி தனது காதுகளை அசைத்து அதுனூடே (அஷ்டாச்சர) எட்டெழுத்து மந்திரத்தை உச்சரித்து மோட்சம் பெற்றதாக வரலாறு. இந்த கண்டாகர்ணன் என்பவன் இந்த தலத்தில்தான் தவமிருந்தான். மூலவர் திருவாழ்மார்பன், ஸ்ரீவல்லபன் கோலப்பிரான், கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம். தாயார் செல்வத் திருக்கொழுந்துநாச்சியார் வாத்சல்ய தேவி தீர்த்தம் கண்டகர்ண தீர்த்தம், பம்பை தீர்த்தம் விமானம் சதுரங்க கோல விமானம் காட்சி கண்டவர்கள் கண்டா கர்ணன், சங்கரமங்கலத் தம்மையார் சிறப்புக்கள் 1. திருவல்லா நகரில் இறங்கி ஸ்ரீவல்லப ஷேத்ரம் என்று சொன்னால்தான் யாருக்கும் தெரியும். இங்கு பெருமாளின் திருமுக மண்டலத்தை தரிசிக்கும்போது அவரது திருவடிகளைச் சரிவர தரிசிக்க இயலுவதில்லை. அத்தகைய ஒரு அபூர்வ அமைப்பில் இத்தலத்தின் கருவறை (மூலஸ்தானம்) அமைக்கப்பட்டுள்ளது. 2. மார்கழி மாதத்து திருவாதிரை நட்சத்திரத்தன்றும், சித்திரை மாதத்து விஷு (வருடப்பிறப்பு) அன்று மட்டுமே இத்தலத்தில் பெருமானை வழிபட பெண்கள் அனுமதிக்கப்பட்டனர். இதற்கு காரணம் அந்தக் காலத்தில் நம்பூதிரிகள் அரைகுறை ஆடையுடன் பூஜையில் ஈடுபட்டிருந்ததால் பெண்கள் அனுமதிக்கப்படவில்லை. 3. இத்தலத்தில் உள்ள பெரிய குளம் தானாகவே உண்டானதென்றும் இன்றும்கூட பூமிக்கடியிலிருந்து ஊற்றுக்கள் மூலம் இந்தக் குளத்திற்கு தண்ணீர் வருவதாகச் சொல்லப்படுகிறது. |