பக்கம் எண் :

415

     4. அமைதியும் எளிமையும் தூய்மையும் மிக்க இத்தலத்தின் உட்புறச்
சுவர்களில், கருவறையின் சுற்றுப்புறச் சுவர்களில் பண்டைத் தமிழ்
எழுத்துக்களாலும் கேரளத்து எழுத்துக்களாலும் இத்தலம் பற்றி செய்திகள்
குறிக்கப்பட்டுள்ளன. தமிழாராய்ச்சியும், மொழியா ராய்ச்சியும், செய்வோருக்கு
இத்தலம் ஒரு கருவூலமாகும்.

     5. மலையாளத்து பாணியில் இந்த தலத்திலும் பக்தர்கட்கு விபூதியும்
சந்தனமும், பிரசாதமாக அளிக்கப்படுகிறது.

     6. நம்மாழ்வாராலும், திருமங்கையாழ்வாராலும் பாடல் பெற்ற
இத்தலத்திற்கு மலையாளத்து புலவர்கள் எண்ணற்ற பக்திப் பாசுரங்களை
கேரளத்து மொழியில் நல்கியுள்ளனர்.

     திருமங்கையாழ்வார் மலைநாட்டுப் பதிகளில் மூன்றினை மட்டும்
மங்களாசாசனம் செய்துள்ளார்.

     திருமங்கையாழ்வாரும் நம்மாழ்வாரும் 22 பாசுரங்களால் மங்களாசாசனம்
செய்துள்ளனர்.

     7. இங்கு நம் கருத்தைக் கவர்வது ஓங்கி உயர்ந்து நிற்கும் கருங்கல்தான்
50 அடி உயரம் 2 அடி சுற்றளவும் கொண்ட இக்கல் பூமிக்கடியில் எவ்வளவு
ஆழத்தில் சென்றுள்ளது என்பது எண்ணிப் பார்க்க முடியாத ஒன்றாகும்.
சுற்றுப்புறத்தில் பாறைகளே இல்லாத இப்பகுதியில் இப்படியொரு பெருங்கல்லை
கொணர்ந்து வைத்தது பேராச்சர்யம்.

     அண்மையில் இந்த கல் தூணின் மீது பஞ்சலோகத்தாலான
கருடாழ்வாரை வைத்துள்ளார்கள். இந்தக் கல்தூண் துவஜஸ்தம்பத்திற்கு
(கொடிக்கம்பம்) சற்று பின்புறம் அமைந்துள்ளது. இதில் அமர்ந்துள்ள
கருடாழ்வார் தமது ஒரு கரங்களையும் விரித்து இதோ புறப்படுகிறேன் என்று
சொல்வதைப் போல வெகுநேர்த்தியாய் எம்பெருமானை (கோலப்பிரானை)
பார்ப்பது போல் அமைந்துள்ள இந்த தோற்றம் காண்டொறும் காண்டொறும்
வியக்கத்தக்கதாய் இருப்பதுடன் காலை நேரத்து வெய்யில் இதில் பட்டு
ஜொலிக்கும் பேரழகு சொல்லுந் தரமன்று.

     8. பொதுவாக தமிழ்நாட்டில் திவ்ய ஸ்தலங்களில் உள்ள
கொடிக்கம்பத்திற்கும் கேரளத்து திவ்ய ஸ்தலங்களில் உள்ள
கொடிக்கம்பத்திற்கும் ஒரு முக்கியமான