பக்கம் எண் :

416

     வேறுபாடுண்டு. தமிழ்நாட்டில் கொடிக் கம்பத்தில் சிற்பங்களையோ
விக்கிரகங்களையோ காண்பதரிது. ஆனால் மலையாளத்து திவ்ய தேசங்களில்
இந்த துவஜ ஸ்தம்பத்தில் சுமார் 6 அல்லது 7 அடி உயரத்தில்
துவஜஸ்தம்பத்தைச் சுற்றி அபூர்வமான சிற்பங்களையும், விக்ரகங்களையும்,
வடித்துள்ளார்கள். இவைகள் அதிதேவதைகளாகவும் சில ஸ்தலங்களில்
நவக்கிரகங்களாகவும் வடிக்கப் பட்டுள்ளன. இங்கு ஒரு சில பக்தர்களின்
இல்லங்களில் வைத்து பூஜிக்கப்படும் திருவாராதன விக்ரகங்களையொத்தே
இவைகள் காணப்படுகின்றன.

     மலையாளத்து திவ்ய தேசங்களில் துவஜஸ்தம்பத்தில் செதுக்கப்பட்ட
இச்சிற்பங்கள் யாவற்றிலும் இத்தலத்துச் சிற்பங்கள் மிகவும் வசீகரத்
தோற்றத்துடனும் தெய்வீகப் பொலிவுடனும் திகழ்வது இத்தலத்திற்கே
உரித்தான ஒரு தனிச்சிறப்பாகும்.

     9. இத்தலத்தில் ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை 7 மணி முதல்
நடக்கும் பூஜை கிரமங்களைப் பார்ப்பதற்கு கொடுத்து வைத்திருக்கவேண்டும்.

     10. கோலப்பிரான் என்ற இப்பெருமானின் திருநாமத்தை தலைப்பிலிட்ட
பாடலில் நம்மாழ்வார் எடுத்தாண்டிருப்பதை நோக்குமிடத்து
எத்துணையாண்டுகட்கு முன்பே தமிழ் இங்கு கொலுவீற்றிருந்த தென்பதை
உணரமுடிகிறது.

     11. இத்தலத்தில் சுதர்சன சக்கரம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதும்,
துவஜஸ்தம்பத்திற்கு பொன் தகடு வேயப்பட்டுள்ளதும் மற்றொரு
விடத்திலில்லாத தனிச் சிறப்பாகும்.

     12. திருவட்டாறு திவ்ய தேசத்தைப் போன்றே இங்கும் மூலஸ்தானத்திற்கு
முன்புறம் அமைந்துள்ள மண்டபத்தின் மீதேறி இறைவனை வழிபட யாரையும்
அனுமதிப்பதில்லை. நித்ய கைங்கர்யத்தில் ஈடுபட்டு பூஜைகள் செய்யும்
போத்தி மட்டும் மண்டபத்தின் மீதேறி இறைவனை தெண்டனிட்டு
வணங்கிவிட்டு தனது பூஜைக்கிரமங்களை ஆரம்பிக்கிறார்.

     குழந்தைப்பாக்கியம் இல்லாதவர்கள் மக்கட்ச் செல்வம் வேண்டி
அவ்வப்போது கதகளி நிகழ்ச்சியை இங்கு ஏற்பாடு செய்வது வழக்கம்.
அந்நிகழ்ச்சியின் மூலமாக