பக்கம் எண் :

417

     எம்பெருமானிடம் புத்திரப்பேறு வேண்டுவதென்பது இதன் பொருள்.
இங்கு வாழ்ந்த வில்வமங்கள சுவாமிகள் என்பாரே இதைத் தொடங்கி
வைத்தார், என்றும் கூறுவர். திருவனந்தபுரத்தின் வில்வ மங்கல
சுவாமிகளினின்றும் இவர் வேறுபட்டவர்.

     14. ஸ்ரீ வல்லபனுக்கு பந்தீராயிரம் என்ற வழிபாடு இங்கு பக்தர்களால்
சிறப்பாக செய்யப்படும் ஒன்றாகும். அதாவது 12000 வாழைக்காய்களை
குலைகுலையாய் வாங்கி ஏதாவது ஒரு வேள்வி செய்து அந்த வேள்வியில்
பழுக்கவைத்துமேளதாளமுடன் புதுக்கூடைகளில் சுமந்து வந்து
திருவல்லாருக்குச் சமர்ப்பித்து வழிபடுவர் பாதிப் பழங்கள் நிவேதனம் ஆகும்.
மீதி 6000 பழங்கள் அனைவருக்கும் வினியோகிக்கப்படும்.

     15. தூவாதசியன்று எம்பெருமானுக்கு இங்கு உணவு படைக்கப்பட்டதைப்
போலவே இன்றும் கமுகு பானையில் பிரசாதமும் உப்பு மாங்காயும்
எம்பெருமானுக்கு நைவேத்யமாக அமுது படைக்கப்படுகிறது. இங்கு கமுக
மரங்கள் செழித்தோங்கி வளர்ந்து நிற்கும் காட்சியை வானார் வண்கமுகும்
மதுமல்லிகை கமழும் என்றும், பச்சிலை நீள்கமுகும் பலவும் தெங்கும்
வாழைகளும் என்று நம்மாழ்வார் தம் பாசுரங்களில் கமுகின் செழுமையை
எடுத்தாண்டுள்ளார்.