பக்கம் எண் :

420

சிறப்புக்கள்

     1. இத்தலத்தில் அமைந்துள்ள நரசிம்மன், கிருஷ்ணன், சந்திரன்
ஆகியோர் மிக்க பேரழகு வாய்ந்தவர்கள். இத்தலத்திற்குள்ளாகவே தனித்தனி
சன்னதிகளாக இரண்டு சன்னதிகளும் அமைந்துள்ளன.

     2. இத்தலத்தில் மூர்த்தி சிறியதாயினும் மிகவும் ஜோதி தோன்றும்
அமைப்பில் வசீகரத் தோற்றத்துடன் அமைந்துள்ளது.

     3. பஞ்ச பாண்டவர்களுள் சகாதேவனால் இத்தலம் புதுப்பிக்கப்பட்டது.
இங்குள்ள கிருஷ்ணன் சன்னதியை சகாதேவனே கட்டி முடித்தான். எனவே
இந்தத் தலம் சகாதேவன் கட்டிய ஸ்தலம் என்றே இப்பகுதி மக்களால்
அழைக்கப்படுகிறது.

     4. இந்தக் கோவிலின் மதில் சுவற்றில் காணப்படும் கல்வெட்டு ஒன்று
வட்டெழுத்தில் உள்ளது. நம் தமிழ்மொழி வட்டெழுத்து நிலையில் இருந்த
காலத்திலேயே இத்தலம் பற்றித் தமிழ்கூறு நல்லுலகம் அறிந்திருக்கிறது என்று
சொல்லலாம்.

     5. நினைத்த மாத்திரத்தில் மோட்சம் தரத்தக்க திருத்தலங்களில் இதுவும்
ஒன்றாகும். காஷ்மீரத்து மொழியில் எழுதப்பட்ட நூலொன்றில்
இந்தியாவிலேயே தலைசிறந்த 15 கிருஷ்ண ஷேத்திரங்களில் மூன்று
ஷேத்திரங்கள் உடனடியாக மோட்சமளிக்க வல்ல தென்றும் அதில் இத்தலம்
மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தென்றும் கூறப்பட்டுள்ளது.

     6. சகல சாஸ்திரங்களும் கற்றுத்துறை போய மேதாவியான சகாதேவன்
ஜோதிடக்கலை வல்லுனன். அவனால் பிரதிஷ்டை (ஸ்தாபிக்கப்பட்ட)
செய்யப்பட்ட கிருஷ்ண விக்ரகம் ஒவ்வொரு 60 ஆண்டுகட்கு ஒரு முறையும்
புதிய சக்தியைப் பெற்றுக்கொண்டே சென்று கலியுகம் முடியும் தறுவாயில்
ஜோதிமயமாய் மாறி விண்ணுள் கலக்குமாம்.

     7. நம்மாழ்வாரால் மட்டும் 11 பாசுரங்களில் மங்களாசாசனம்
செய்யப்பட்டது.

     8. இங்கு ஒரு காலத்தில் எம்பெருமானுக்கு நடைபெற்ற திருவிழாக்களில்
ஒன்றில் பெண்கள் குடைபிடித்து