நடனமிடும் நிகழ்ச்சி மிகச் சிறப்பாக இடம் பெற்றிருந்தது. குடைக்கூத்து என்ற பெயரில் வழங்கப்பட்டு் வந்த இந்த நிகழ்ச்சியைத்தான் குடக்கூத்த அம்மானே என்று தலைப்பிலிட்ட பாசுரத்தில் நம்மாழ்வார் மறைமுகமாக உணர்த்தியிருப்பதாகவும், குடைக்கூத்தென்பதே மருவி குடக்கூத்தாயிற்றென்றும், மலையாள மொழி நூலறிஞர்கள் விளக்கம் நவில்கின்றனர். ஆனால் பெண்டிரின் குடங்களை எடுத்து அவைகளை எகிறி மீண்டும் தன்னிடமே (பந்துபோல்) வருவது போலவும், இது தொடர் நிகழ்ச்சியாய் நடந்து கொண்டிருக்கும் போதே தங்களது குடங்களைப் பற்றிக் கொள்ள பெண்கள் அப்பாலும் இப்பாலும் ஓடியாடி வந்துகொண்டேயிருக்க அவர்களை இந்தவிதமாக கூத்தாட வைத்து குடங்களை பிடிக்கச் செய்யாதே மயங்கி நிற்க வைப்பானாம். கண்ணன், இந்தக் காட்சியை, குடங்க ளெடுத்தேற விட்டுக் கூத்தாட வல்லவென் கோவே மடங்கொள் மதி முகத்தாரை மால் செய்ய வல்ல வென்மைந்தா என்று பெரியாழ்வார் மயங்குகிறார். | இதை இளங்கோவடிகள் திருமால் குடக்கூத்தாடியதாகவும் கூறியுள்ளார். சோ என்னும் நகரில் வாணனை அழிக்க ஆடிய ஆட்டத்தை குடத்தாடல் என்ற சொல்லால் குறிக்கிறார். மேலும் இக்கோவிலைச் சுற்றி சிதலமடைந்த மண்டபம், மற்றும் வெளிப்புற வாசற் கதவருகேயுள்ள சுவர்ச் சிற்பங்களில் பெண்கள் குடைபிடித்து நடன மிடுதல் போல உள்ள காட்சிகளும் ஆய்வுக்குரியதாகும். 9. இத்தலத்து எம்பெருமானின் பெயர் அற்புத நாராயணன் என்பதாகும். இதனை நம்மாழ்வார். அற்புதன் நாராயணன் அரிவாமனன் நிற்பது மேவி இருப்பதும் என்னெஞ்சகம் நற்புகழ் வேதியர் நான்மறை நின்றதிர் கற்பகச் சோலைத் திருக்கடித்தானமே - என்று எடுத்துரைத்தார். | பெரியாழ்வார் கூறுவது கண்ணன் குடங்களை எடுத்து பந்துபோல எறிந்து ஆடும் கூத்து குடக்கூத்தாகும். ஆனால் இங்கு பெண்கள் குடைபிடித்து ஆடுவதே |