பக்கம் எண் :

422

குடக்கூத்தாகும். (மலையாளத்தில் குடையை, கொட என்றும் கூறுவார்கள்)
இவ்வாறு இத்தலத்திற்கு முன் பெண்களால் ஆடப்பட்ட குடை நடனத்தையே
நம்மாழ்வார் தமது பாசுரத்தில் குறிப்பிட்டுள்ளார்) கண்ணன் கோவர்த்தன
கிரியைக் குடையாக எடுத்து ஆடியதை ‘நீர் நிலம் அளந்தோன் ஆடிய
குடையும்’ என்று சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் கூறியுள்ளார். குடைக்
கூத்தை நினைவுகூர்வது ஆழ்ந்து சிந்திக்கத்தக்கதே

     இதே இளங்கோவடிகள் திருமால் குடக் கூத்தாடியதையும் கூறியுள்ளார்.
சோ என்னும் நகரில் வாணனை அழித்து ஆடிய ஆட்டத்தை குடத்தாடல்
என்ற சொல்லால் குறிக்கிறார்.

     அதாவது கண்ணன் கோவர்த்தன கிரியை எடுத்தாடியதை குடைக்
கூத்தாக பலரும் அக்காலத்தே ஆடினாரெனலாம்.

     10. பாடல் 2615 இல் ‘குடங்கள் தலை மீதெடுத்துக் கொண்டாடி அன்றத்
தடங்கடலை மேயார் தமக்கு’ என்று குடக்கூத்தை குடைக் கூத்தினின்றும்
பிரித்துச் சொல்லியிருப்பதும் ஆயத்தக்கது.