பக்கம் எண் :

423

71. திருச்செங்குன்றூர் (திருச்சிற்றாறு)

.
     எங்கள் செல்சார்வு யாமுடையமுதம்          
         இமையவரப்பன் என்னப்பன்     
     பொங்கு மூவுலகும் படைத்தளித்தழிக்கும்          
        பொருந்து மூவுருவன் எம்மருவன்     
    செங்கயலுகளும் தேம்பனை புடைசூழ்     
         திருச்செங்குன்றூர் திருச்சிற்றாறு     
     அங்கு அமர்கின்ற ஆதியானல்லால்          
         யாவர் மற்று என் அமர்துணையே     
                      (3481) திருவாய்மொழி 8-6-2

     என்று நம்மாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் திருச்செங்குன்றூர் என்ற
பெயரில் சிறந்த நகரமாக விளங்குகிறது. செங்குன்றூர் என்றால்தான் யாருக்கும்
எளிதில் விளங்கும். திருவல்லாவில் இருந்து இவ்வூர் வழியாக திருவாறன்
விளை திவ்யதேசமான ஆரமுளாவிற்குப் பல பேருந்துகள் செல்கின்றன.

     இங்குள்ள பேருந்து நிலையத்திலிறங்கி சிற்றாறு என்றோ அல்லது
தர்மரால் கட்டப்பட்ட அம்பலம் எங்குள்ளது என்றால் எளிதில் பாதை
காட்டிவிடுவார்கள். பேருந்து நிலையத்திலிருந்து நடந்தே வந்து சிற்றாரு
நதியைக் கடந்து (தற்போது மேற்கு திசையில் சுமார் 2 பர்லாங் சென்றால்
இத்தலத்தை அடையலாம்.]

வரலாறு.

     இத்தலத்தைப் பற்றிய புராண வரலாறு தெளிவாக அறியுமாறில்லை.
இவ்விடத்து யாரை வினவினும் பஞ்ச பாண்டவர்களுள் தர்மரால் கட்டப்பட்ட
அம்பலம் என்று மட்டுமே ஒரு வரியில் ஸ்தல புராணத்தை
முடித்துவிடுகின்றனர்.

     பாரத யுத்தத்தில் துரோணரைக் கொல்வதற்காக தர்மன் ஒரு பொய்
கூறினான். அஸ்வத் தாமன் இறந்துவிட்டான் என்று சொல்ல வேண்டிய
தர்மன் அஸ்வத்தாமன் என்ற சொல்லைப் பலமாக கூவி (அஸ்வத்தாமன்
என்ற) யானை இறந்து விட்டது என்ற சொல்லை மிக மெல்லிய சப்தத்தில்
உச்சரித்தான். இதனால் போரில் துரோணாச்சாரி கொல்லப்பட்டார்.

     தான் சொன்ன பொய்யே துரோணரின் இறப்புக்குக் காரணமாய்
இருந்ததை எண்ணி தர்மன் அதற்குப் பெரிதும் மனம் வருந்தி போர் முடிந்த
பிறகு இத்தலத்தில் வந்து மன அமைதிக்காக