பக்கம் எண் :

433

மூலவர்

     பாம்பனையப்பன், கமலநாதன், மேற்கு நோக்கி நின்ற திருக்கோலம்.

தாயார்

     கமலவல்லி நாச்சியார்

தீர்த்தம்

     பம்பை தீர்த்தம்

விமானம்

     வேதாலய விமானம்

காட்சி கண்டவர்கள்

     நாரதர்.

சிறப்புக்கள்

     1. பஞ்ச பாண்டவர்கள் கேரள தேசத்திற்கு வந்தபோது மிகவும்
சிதலமடைந்திருந்த இத்தலத்தை நகுலன் புதுப்பித்து சீர்படுத்தியதால்
நகுலனால் உண்டாக்கப்பட்ட தலம் என்றே இப்பகுதியில் வழங்கப்படுகிறது.

     2. இவ்வூரில் பூமியைத் தோண்டும்போது புதிய பெருமாள்
விக்கிரகங்கள் கண்டெடுக்கப்பட்டு இவ்விடத்தில் கொணர்ந்து புதிய
மண்டபங்களும் சன்னதிகளும் ஸ்தாபிக்கப்பட்டன.

     3. இத்தலம் வட்டவடிவான கருவறையுடன் கூடியிருப்பதும் சங்கு,
சக்கர, கதா, பத்ம பானியாகப் பெருமாள் மேற்கு நோக்கி
எழுந்தருளியிருப்பதும் கண்கொள்ளாக் காட்சியாகும்.

     4. இத்தலத்திற்குள் நுழையும் போது (மேற்கு புற நுழைவாசலில்,
வாசலின் மேல் காளிங்கனின் மேல் (காளிங்கன் என்னும் கொடிய
விஷங்கொண்ட ஐந்து தலை நாகம்) கண்ணன் நர்த்தனமிடுவதுபோல்
அமைந்திருக்கும் சிற்பம் பேரழகு பொருந்தியதாகும். இக்கண்ணன்
காளிங்கனின் தலை மீது ஒரு காலை ஊன்றிக்கொண்டு ஒரு காலை வலப்புறம்
வளைத்து தூக்கித் தனது இரண்டு கரங்களையும் (பேலன்ஸ் செய்வது போல)
நீட்டி நிற்கின்ற காட்சி காணக் காணக் கண்ணையும் கருத்தையும் விட்டு