பக்கம் எண் :

434

     அகலாத ஒன்றாகும். இக்கண்ணன் தூய நீல நிறத்தில் அமைந்திருப்பது
இன்னுமோர் பேரழகாகும்.

     5. கண்ணனைத் தாங்கி நிற்கும் இரண்டு தூண்களின் இரண்டு
பக்கங்களிலும் தசாவதாரக் காட்சி மிக நுட்பமாகச் செதுக்கப்பட்டுள்ளது.

     6. நம்மாழ்வார் 10 பாசுரங்களில் மங்களாசாசனம் செய்துள்ளார்.

     7. மிகவும் எழில் வாய்ந்த இயற்கைச் சூழலில் அமைதி கொஞ்சித்
தவழ்ந்து கொண்டிருக்கும் பகுதியில் இத்தலம் அமைந்துள்ளது. இப்பேரழகை
நம்மாழ்வாரும்.
 

     செய்கொள் செந்நெலுயர் திருவண்வண்டூர்
     திணர்த்த வண்டல்கள் மேல் சங்குசேரும்
               திருவண்வண்டூர்
     செருவொன் பூம் பொழில் சூழ் செக்கர்வேலைத்
               திருவண்வண்டூர்
     செருந்திருஞாழல் மகிழ் புன்னைசூழ்தண் திருவண்வண்டூர்”

     என்று சொல்லிச் சொல்லி மகிழ்கிறார்.

     8. கேரளாவில் புகழ்பெற்ற பம்பை நதிக்கு வடக்கே இத்தலம்
அமைந்துள்ளதை ‘தேறுநீர் பம்பை வடபாலைத் திருவண்வண்டூர்’ என்று
நம்மாழ்வார் தன் பாசுரத்திலும் சுட்டுகிறார்.

     9. பஞ்ச பாண்டவர்கள் சம்பந்த முற்ற ஸ்தலங்களில் இந்த தலம்
அடிக்கடி விழாக்களும் முக்கியமான நிகழ்ச்சிகளும் நடைபெறும் இடமாகும்.