பக்கம் எண் :

437

விமானம்

     ஹேமகூட விமானம்

காட்சி கண்டவர்கள்

     இந்திரன், திவாகர முனிவர் ஏகாதச ரூத்ர்கள்.

சிறப்புக்கள்.

     1. பலராமன் தீர்த்தயாத்திரையின் போது இந்தச் ஸியானந்தூரபுரத்தைத்
(திருவனந்தபுரத்தை, தரிசித்தார்) என்று பாகவதம் கூறுகிறது.

     2. எம்பெருமானின் திருமேனி மிகப்பெரிய வடிவமானதால் சிரசு, உடல்,
திருவடிகள் இவற்றை மூன்று வாசல்கள் வழியே தனித்தனியே தரிசிக்க
வேண்டும். திருவட்டாற்றிலும் இதேபோன்று மூன்று வாசல்கள் வழியேதான்
எம்பெருமானைத் தரிசிக்க வேண்டும்.

     3. இந்த அனந்த சயனனைக் குறித்து இங்கு விரதமிருந்து சில நாட்கள்
மட்டும் தங்கியிருப்பது மிகவும் விசேஷமானதாகும்.

     4. இச்சன்னதியின் தெற்கில் (தெற்குப் பிரகாரத்தில்) யோக நரசிம்மனும்,
சன்னதிக்கு முன்புறம் ஆஞ்சநேயரும், பின்புறம் கிருஷ்ணனும்
காட்சியளிக்கிறார்கள். இந்த அனுமான் மீது சாத்தப்படும் வெண்ணெய்
எவ்வளவு நாட்களானாலும் எத்தனை வெயில் அடித்தாலும் உருகுவதே
இல்லை.

     5. இத்தலத்திற்கு அஸ்திவாரமிட்டு வேலையைத் துவக்கியவர் சேரமான்
பெருமாள் நாயனார் என்று (கி.பி. 1050) கல்வெட்டுக் கூறுகிறது.

     6. கோவிலைச்சுற்றி நான்கு புறமும் உள்ள பிரகாரம், அதில் வரிசையாக
அமைக்கப்பட்டுள்ள 366 தூண்கள், ஒவ்வொரு தூணுக்கும் ஒரு விளக்கேந்திய
பாவை, தூய்மையில் கொலுவிருக்கும் பிரகாரங்கள், காணக் கண்கொள்ளாக்
காட்சியாகும்.

     7. கி.பி. 1673 முதல் 1677 வரை பூஜையின்றி இக்கோவில்
அடைக்கப்பட்டிருந்தது. 1686 இல் இக்கோவில் தீப்பிடித்து மூலவிக்ரகம் தவிர
பிறவெல்லாம் பழுதுற்றது. கி.பி. 1729ல் ராஜாமார்த்தாண்ட வர்மாவினால்
புதுப்பிக்கப்பட்டு