பக்கம் எண் :

438

மரத்தாலான மூல விக்ரகம் அகற்றப்பட்டு 12000, சாளக்கிராமத்தினாலும்,
கடுசர்க்கரா என்ற அஷ்டபந்தனக் கலவையாலும் நிறுவப்பட்ட புது அனந்த
சயன மூர்த்தியே இப்போது நாம் காண்பதாகும்.

     1750 ஆம் ஆண்டில் ராஜா மார்த்தாண்ட வர்மர், தனது
உறவினர்களுடனும், தளபதி சேனா பரிவாரங்களுடன் இச்சன்னதிக்கு வந்து
தன் ஆட்சிக்குட்பட்ட ராஜ்யம் மற்றும் பிற செல்வங்களையும் அனந்தபுரம்
பத்மநாபனுக்கே பட்டயமெழுதிக்கொடுத்து தன் உடைவாளையும் அவரின்
திருப்பாதத்தில் வைத்து எடுத்துக்கொண்டு பரிபூர்ண சரணாகதி அடைந்தார்.
அன்றுமுதல் திருவிதாங்கூர் அரச பரம்பரையினர் பத்ம நாப தாசர் என்றே
அழைக்கப்பட்டனர். தினமும் காலையில் வந்து பத்மநாபரை வணங்கி
ஆசீர்வாதம் பெற்று ஆட்சி நடத்தினர்.

     இன்று அரசபதவியில்லாவிட்டாலும், ராஜ்யம் உருமாறி அம்மன்னர்
பரம்பரை இன்று நமது குடியரசின் கீழ் சாதாரண பிரஜைகளாக
வாழ்ந்தபோதும், அன்றுபோல் இன்றும் திருவிதாங்கூர் ராஜா தினமும்
காலையில் ஆலயத்திற்கு வந்து பத்மநாபரை வழிபட்டுச் செல்லும் பண்பு
மாறவில்லை. கேவலமான மண்ராஜ்யம் போனாலும், தூய்மையான பக்தி
சாம்ராஜ்யத்தை விடாது போற்றிக் காக்கும் அம்மன்னர் பரம்பரையின்
மகத்துவம்தான் என்னே.

     இன்றும் அவர்கள் பத்மநாப தாசராகவே வாழ்ந்து வருகிறார்கள். தனி
வழியே வந்து (தரிசனத்தின் பொருட்டு) தனிவழியே திரும்பிச் செல்கிறார்கள்.
அப்போது வேறு யாரையும் தரிசனத்திற்கு அனுமதிப்பது இல்லை ராஜா
திருச்சன்னதியை நோக்கி குனிந்து நமஸ்கரித்து விரல்களால் தரையைத்
தொட்டுத்தொட்டுத் தன் மார்பில் பக்தி சிரத்தையோடு அந்த விரல்களை
வைக்கும் பாணி, ஓ நெஞ்சுருகச் செய்து கண்களில் பக்தி நீரை
வரவழைக்கிறது.

     இந்தியா சுகந்திரம் பெற்றபின், திருவிதாங்கூர் இந்திய யூனியனுடன்
இணைக்கப்பட்டாலும் இக்கோவில் மட்டும் அரசால் எடுக்கப்படாது
மகாராஜாவால் மட்டுமே நிர்வகிக்கப் பட்டுவந்துள்ளது.

     இக்கோவிலின் உள்ளே மண்டபம் ஒன்று பல இசைத் தூண்களைக்
கொண்ட தாயும், ஒவ்வொன்றிலும்