பக்கம் எண் :

439

தசாவதாரச் சிறப்பை விளக்கும் சித்திர மேம்பாட்டுடன் கூடியதாகவும்
விளங்குகிறது. இதைக் குலசேகராழ்வார் கட்டினார் என்றும் கூறுவர். ஆனால்
கல்வெட்டு செய்தி ராமவர்ம மகாராஜாவால் கட்டப்பட்டதென்றும் கூறுகிறது.
ஆயினும் இதைக் குலசேகர மண்டபம் என்றழைக்கப்படுவதே
மரபாயிருந்துவருகிறது. இதனைச் சப்த ஸ்வர மண்டபம் என்றும் கூறுவர்.
இதில் உள்ள தூண்களை லேசாகத் தட்டினால் ஒவ்வொரு தூணிலும்
ஒவ்வொரு இசைக் கருவியின் நாதம் எழுகிறது. ஒரு தூணில் எழுகின்ற
நாதத்தை மற்றொரு தூணில் காது வைத்து ரசிக்கலாம்.

     9. இத்திருத்தலத்தைச் சென்று வழிபடுவோருக்கு நோயும், வினைகளும்,
பாபமும் அப்போதே தொலையுமென்று நம்மாழ்வார் 11 பாசுரங்களில்
மங்களாசாசனம் செய்கிறார்.

     10. ஸ்வாமி நிகாமனந்த தேசிகரும் மங்களாசாசனம் செய்துள்ளார்.

     11. இராமானுஜர் இங்குவர எத்தனித்தபோது எதிரிகள் இவரைக் கொல்ல
நினைக்க (அல்லது தமது வழிபாட்டுரிமையை மாற்றிவிடக் கூடுமென
இங்குள்ள பிராம்மணர்கள் அஞ்சி அனந்தனைச் சரணடைய) இறைவனே
இராமானுஜரைக் காத்து திருக்குறுங்குடி சேர்ப்பித்ததாகக் கூறுவர். இதனை
குறுங்குடி ஸ்தல வரலாற்றிலும் காணலாம்.

     12. மன்னர்கள் ஆட்சியில் அமரும்முன் சுவாமியின் முன் சென்று தமது
உடைவாள், ஆயுதம், போர் உடை செங்கோல் போன்றவற்றை சமர்ப்பித்து
திரும்ப எடுத்துக்கொள்வது வழக்கம்.

     13. மன்னர்கள் பத்மநாத சுவாமிக்கு மூரஜபம் என்று கூறப்படும்
திருவிழாவை பெரிய அளவில் கொண்டாடுவது வழக்கம். மன்னர்
மார்த்தாண்டவர்மர் 1750 ஆம் ஆண்டில் நான்கு வேதங்களையும் ஆலயத்தில்
8 தடவைகள் முழுமையாகக் கூறக்கேட்டு ஆலயம் முழுதும் லட்சதீபங்கள்
ஏற்றி கொண்டாடினாராம். கோபுரத்தின் இந்த திருவிளக்கு தோற்றம்
பத்மதீர்த்தம் என்ற திருக்குளத்தில் மிக அழகாக பிரதிபலிக்கும். இச்சிறப்பான
திருவிழா 1960 வரை தொடர்ந்து கொண்டாடப்பட்டது.