கலியுகத்தில் 950 வது நாளில் திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி சன்னதி தோற்றுவிக்கப்பட்டது. இதைவிட திருவட்டாறு 1284ஆம் ஆண்டுகள் முற்பட்டது என்று மதிலக கிரந்தம் என்ற நூலில் சொல்லப் பட்டுள்ளது. திருவட்டாறு தேவஸ்தானத்தில் கிடைத்த வட்டெழுத்துக்களாலான ஓலைச்சுவடியில் இத்தலம் திரேதா யுகத்தில் தோற்றுவிக்கப்பட்டது எனக் கூறப்பட்டுள்ளது. பிள்ளைப் பெருமாளையங்காரின் விபவனாலங்காரம் என்னும் நூலில் இத்தலம் பற்றிய கவிதை ஒன்று உள்ளது. மாலைமுடிநீத்து மலர்ச்செம்பொன்னடி நோவ பாலைவனம் நீபுகுந்தாய் .... கேசவனே பாம்பனை மேல் வாட்டாற்றில் துயில்கொள்பவனே | திருக்குருகைப் பிரான் எழுதிய மாறன லங்காரம் (கி.பி. 16 ஆம் நூற்றாண்டு) இத்தலம் பற்றி புகழ்ந்துள்ளது. கேரளாவின் மிகப்பெரும் கவிஞரான கவிகுல திலகம் களக்கூத்து குஞ்சன் நம்பியார் இத்தலம் பற்றி பின்வருமாறு கூறியுள்ளார். எட்டெழுத்து மந்திரத்தின் பொருளான ஆதிகேசவனே என்னை ஒருவட்டமாவது உன் திருக்கண்களால் நோக்காயோ வேனாடு என்பது திருவிதாங்கூர் பகுதி. இப்பகுதியில் இசைச் சக்கரவர்த்தி ஸ்வாதித் திருநாள் இப்பெருமாள் மீது கீர்த்தனங்கள் இயற்றியுள்ளார். ஸ்ரீலஸ்ரீ மதுராந்தஜி மகாராஜா, ஆறாய் கவிகள் பொழிந்து ஆழ்வார் பரவிப் போற்றும் மாறாப் பேரன் புருவாம் பண்புடை சைதன்யர் வாழ்த்தும் ஆறார் திருவாட் டாற்றின் ஆதிகேசவப் பெருமாள் மாறாய் என் உள்ளத்தென்றும் மலரடி வணங்கி னேனே’. என்று கூறுகிறார். ‘வாழி திருவட்டாறு வாழி திருமாயவன் வாழியடியார்கள் வளமையுடன் வாழி திருமாலடி சேர்ந்தார் தெய்வபலம் சேர்ப்பார் | |