கருமால் அறுப்பர் அணிந்து’ என்கிறார் கிருபானந்த வாரியார் ‘சேத்ரா நாம பரசுராம ஷேத்ரா தீர்த்த நாம சக்ர தீர்த்த’ | என்று அத்யயன ராமாயணம் கூறுகிறது. வேதவியாசரின் பாத்ம புராணம் வசிஷ்ட மஹரிஷி இங்கு வந்து இப்பெருமானை தரிசித்துவிட்டு நெடுங்காலம் இங்கேயே தங்கியிருந்து 5 மடங்களை உருவாக்கினார் என்று தெரிவிக்கிறது. இம்மடங்கள் இவருக்குப்பின் இவரது சீடர்களால் நிர்வாகிக்கப்பட்டன. அவைகள் 1. முனிகள் மடம் 2. மார்த்தாண்ட மடம் 3. ராமனா மடம் 4. பஞ்சாண்ட மடம் 5. காஞ்சி மடம். கலியுகத்தின் தொடக்கம் வரை மேற்சொன்ன மடங்களின் நிர்வாகத்தின் கீழ் இத்தலம் இருந்து வந்தது. (கி.மு. 3102 பெப்ரவரி 13 கலியுகம் தொடங்கிய நாளாகும்) இவர்களின் காலத்திற்குப் பிறகு திருப்பதி ஸ்ரீ வைஷ்ணவர்கள் ஆனவாரி பிள்ளைமார்கள் ஆகியோரின் நிர்வாகத்தின் கீழ் இத்தலம் இருந்தது. வரலாறு. பிரம்மன் ஒரு யாகம் செய்ய யாக வேள்வியில் தோன்றிய கேசன், கேசி என்னும் இரு அரக்கர்கள் யாகத்திற்கு இடையூறு விளைவித்ததோடு தேவர்களையும் விண்ணுலகையும் அச்சுறுத்தினர். அனைவரும் சென்று திருமாலிடம் முறையிட திருமால் கேசனைக் கொன்று கேசியை கீழே தள்ளி கேசியின் மீது படுத்துக் கொண்டார். கேசியின் மனைவி கங்கையையும் தாமிரபரணியையும் துணைக்கழைக்க அவ்விருவரும் வேகமாக ஓடிவர அந்நிலையில் பூமாதேவி திருமால் சயனித்திருந்த இடத்தை பெரிய மேடாக ஆக்க இது திருமகளின் செயல் என்பதை உணர்ந்த இரண்டு நதி தேவதைகளும் அவ்விடத்தைச் சுற்றி இரண்டு மாலைகள் போல் வட்டவடிவில் வந்தபடியால் இவ்விடம் வட்டாறு என வழங்கப்பட்டு வட்டாறு ஆயிற்று. இவ்விடம் மேடாக இருப்பதை, ‘மாலை மாடத் தரவணைமேல் வாட்டாற்றான்’ | என்கிறார் நம்மாழ்வார். கேசியை அழித்தால் பகவான் ஆதிகேசவர் என்று வழங்கப்படுகிறார். இங்கு கங்கையும் தாமிரபரணியும் மாலை போல் பிரியுமிடத்தில் ஒன்றுக்கு கோதையென்றும் ஒன்றுக்கு |