| பரளி என்றும் பெயருண்டாயிற்று. நதிகள் பிரியும் இவ்விடத்திற்கு மூவாத்து முகம் என மலையாளத்தில் குறிப்பிடுகின்றனர். மூலவர் ஆதிகேசவப் பெருமாள். புஜங்க சயனம் மேற்கு நோக்கிய திருக்கோலம். இடது கை தொங்கவிட்ட நிலையிலும் வலது கை யோக முத்திரை காட்டி தெற்கே சிரசும் வடக்கே திருவடியும் ஸ்ரீசேஷ சயனமாக மேற்கு நோக்கிய திருக்கோலம். நாபித் தாமரையோ பிரம்மாவோ இல்லை 23 அடி நீளமான திருக்கோலம். இவரின் சிரசருகே ஹாதலேயே மஹரிஷி உள்ளார். தாயார் மரகதவல்லி நாச்சியார் தீர்த்தம் கடல்வாய் தீர்த்தம், வாட்டாறு ராமதீர்த்தம் விமானம் அஷ்டாங்க விமானம் காட்சி கண்டவர்கள் பரசுராமன், சந்திரன். சிறப்புக்கள் 1. வளமிக்க வாட்டாறு என்பது நம்மாழ்வார் திருவாக்கு, திருவனந்தபுரம் போலவே இங்கு மூன்று வாசல். 20 படிகள் ஏறிச்சென்று இச்சன்னதியை அடையவேண்டும். சுற்றுப் பிரகாரத்தில் 224 தூண்கள் உண்டு. கேரளத்துப் பாணியில் ஒவ்வொன்றும் ஒரு பாவை விளக்கேந்திய பெண். இங்கு மூலவர் சன்னதிக்கு முன்புறம் 18 அடி சதுரமும் 3 அடி உயரமும் கொண்ட ஒரே கல்லால் ஆன ஒற்றைக்கல் மண்டபம் உள்ளது. இங்கு ஆதிசேடன் ஐந்து தலை நாகமாய் குடை விரித்திருக்கிறார். இதில் ஒரு தலையைத்தான் காணமுடியும். பெருமாளின் கீரிடமும் பாதிதான் தெரியும். பாதி உள்ளே மறைந்துள்ளது. திருவனந்தபுரத்தில் நாபியில் கமலம் பிரம்மர் இல்லை. அங்கே பெருமாளின் வலது கை சிவலிங்கத்தை தொட்டுக்கொண்டிருக்கும். இங்கே திருப்பாதங்கட்கு அருகில் சிவலிங்கம் உள்ளது. அங்கே கிழக்கு நோக்கிய சன்னதி. இங்கே மேற்கு நோக்கிய சன்னதி. ஸ்ரீஆதி அனந்தபுரம் என்றும் சேரநாட்டு ஸ்ரீரங்கம் என்றும் இதற்குப் பெயர். நம்மாழ்வாரும், |