பக்கம் எண் :

446

     ‘திரைகுழவு கடல்புடை சூழ் தென்னாட்டுத் திலதமன்ன
     வரைகுழவு மணிமாட வாட்டாற்றான் மலரடியே’

     என்று தென்னாட்டுக்குத் திலகம் போல் இத்தலம் இலங்கியதை
விளம்புகிறார்.

     2. சந்திரனும், பரசுராமனும் இத்தலத்து எம்பெருமானை வழிபட்டு இங்கு
தவமியற்றினர். திரேதா யுகத்தில் பரசுராமன் சந்திரத் தீர்த்தத்தில்
இப்பெருமாளை பூஜித்தார் என்று புராணம் கூறுகிறது.

     3. கி.பி. 510 இல் சைதன்யர் இங்கு வந்திருந்தார். இவருக்கு பிரம்ம
ஸம்ஹிதை இங்கு கிடைத்ததாக கூறப்படுகிறது. உள்ளூர் வாசியான
பரமேஸ்வரன் பிள்ளை தம் நூலில் இதைப்பற்றிக் கூறியிருக்கிறார். இது 100
அத்தியாயம் கொண்டது. 5 அத்தியாயங்கள் வங்கமொழியில் வெளிவந்துள்ளது.
தற்போது ஹரேராமா, ஹரேகிருஷ்ணா இயக்கத்தினர் இந்நூலை ஆங்கிலத்தில்
மொழியாக்கம் செய்துள்ளனர்.

     4. அமெரிக்காவில் பாஸ்டன் நகரிலிருந்து வந்த அனந்த சைதன்யன்
என்னும் சன்னியாசி இந்த கோவில் அமெரிக்காவில் உள்ள கதீட்ரல் ஆலயம்,
செயிண்ட் பால் பீட்டர் ஆலயம் இவ்விரண்டையும் விட இங்கு தெய்வ
சான்னித்தியம் அதிகம் இருப்பதை உணர்ந்து அதனால் ஈர்க்கப்பட்டு சிலகாலம்
இங்கே தங்கி பாவ சமாதியில் ஆழ்ந்துவிட்டார் என்று தேவஸம் போர்டின்
குறிப்புகள் கூறுகின்றன.

     5. சங்க காலத்தே சிறப்பாகப் பேசப்படும் எழினி ஆதன் பிறந்த ஊர்
இந்த திருவாட்டாறுதான். புறநானூறு புரந்த எழினி ஆதன் ஊர் என்று
மாங்குடி கிழார் கூறுகிறார்.

     6. துவாபார யுகத்தில் சோமயாசி என்னும் ரிஷி இவ்விடம் தனது
மனைவியுடன் தங்கி ஒரு பர்ணகசாலை அமைத்து புத்திர பாக்கியம் வேண்டி
யாகம் செய்தார். யாக குண்டலியில் ஒரு புத்திரன் உண்டாக அப்புத்திரனை
சப்தரிஷிகள் வளர்த்து வரலாயினர். சுசிவ்ருதன் என்னும் தேவகுமாரன்
ஹாதலேகன் எனப் பெயர் பூண்ட இப்பையனை பார்த்து உன் அப்பா, அம்மா
யார் எனக் கேட்க இவன் பக்கத்திலிருந்த கதலியை (வாழைமரம்) காட்டி
இவர்களே என்று சொல்ல தேவகுமாரன் நகைக்க