பக்கம் எண் :

449

     9. இந்த வெற்றியை கொண்டாடும் முகத்தான் முகில்கான் படைகள்
வீழ்ச்சி அடைந்த நாளில் எம்பெருமானுக்கு விசேச பூஜையும் வீரகேரள
பாயாசம் வழங்கப்படும் நிவேதனமும் தினத்தில் ஆண்டுதோறும்
நடைபெறுகிறது. இதை ஏற்படுத்திய குறுநிலமன்னன் ஆண்ட ஊர்
இரண்யசிம்ஹ நல்லூர் என்பதாகும். இவ்வூர்தான் தற்போது இரண்யல்
என்றழைக்கப்படுகிறது.

     10. இங்கு நடைபெறும் திருவிழாக்களும் உற்சவங்களும் மிகச்
சிறப்பானவைகளாகும். அவைகள் மீன உற்சவம். துலா உற்சவம் என
அழைக்கப்படுகிறது. இவ்விரண்டு திருவிழாக்களும் 10 நாட்கள் நடைபெறும்.
இதில் 9வது திருநாள் யானை குதிரையில் பெருமாள் புறப்பாடாகி தாரை
தப்பட்டைகள் முழங்க கோலாகலமாய் நடைபெறும். இதற்கு பள்ளிவேட்டை
என்றும் பெயருண்டு.

     11. வைகுண்ட ஏகாதசி திருவிழாவும், தினத்தில் சொர்க்கவாசல்
திறப்பதும், முலைப்பாரி உற்சவமும் இங்கு மிகச் சிறப்பானதாகும்.

     12. இத்தலத்தில் எண்ணற்ற கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன.
இங்குள்ள வட்டெழுத்துக்களாலான கல்வெட்டில் கீழ்க்கண்டவர்களின்
ஆட்சிக்காலம் குறிக்கப்பட்டுள்ளது.

     1. குலசேகரப்பெருமாள்    - கி.பி. 644-659
     2. வீரமார்த்தாண்டவர்மா  - 510-519
     3. வீரகேரளவர்மா        - 519-550
     4. செம்பலாதித்த வர்மா   - 612-645
     5. உன்னி கேரள வர்மா   - 734-753
 
    மேற்சொன்னவர்களுக்கு இத்தலத்தில் சிற்பங்கள் உண்டு

     13. இங்குள்ள கொடிக்கம்பத்தில் தமிழ்க் கல்வெட்டுக்கள் உள்ளது. இதில்
9 கைவிளக்குகள் உள்ளன.

     14. இங்குள்ள 2 1/2 அடி உயரமுள்ள முரளி வேணுகான கிருஷ்ண
சிற்பமும், இவர் எழுந்தருளியுள்ள மண்டபமும் மிக நேர்த்தியான தாகும்.

     15. இத்தலத்தின் வெளிப்பிரகாரத்தின் 3வது தூணிலும் பிற தூண்களிலும்
பலவிதமான சிற்பங்கள் உண்டு. ஒரு கையில் திரிசூலம் ஏந்திய ஒரு பெண்,
மற்றொரு தேவதை