பக்கம் எண் :

450

தன்கையில் திரிசூலம், கேடயம் வாள் ஏந்திய தோற்றத்துடன் கூடிய சிற்பம்,
நாய் சங்கு ஊதும் சிற்பம், பெண் ஒருத்தி குடைபிடித்து நடனம் ஆடும்
சிற்பம், வைரவரின் சிற்பம், இத்துடன் தமிழ் எழுத்துக்களாலான கல்வெட்டும்
சேர்ந்து வெளிப்பிரகாரம் ஒரு கலைக்களஞ்சியம் போல் தென்படுகிறது.

     16. குலசேகர ரவி வர்மாவால் கட்டப்பட்ட மண்டபம் ஒன்று
இங்குள்ளது. மூலஸ்தானத்தில் 5 தங்க கலசங்கள், (பொன் முலாம்
பூசியதுண்டு) கருவறைக்கு மேல் உள்ள அஷ்டாங்க விமானம் செம்பாலானது.
தாரு மரத்தாலான சிற்பங்களும் இம்மன்னன் செய்வித்தான்.

     17. கலி 4705இல் இத்தலம் புதுப்பிக்கப்பட்டதாக இங்குள்ள தமிழ்க்
கல்வெட்டால் அறியமுடிகிறது. இங்கு ஒரே கல்லினாலான ஒற்றைக்கல்
மண்டபம் உள்ளது. இது 25 அடி நீளம் 171 அடி அகலம் 3 அடி உயரம்
இம்மண்டபம் கொல்லம் ஆண்டு 778 இல் ஸ்தாபிக்கப்பட்டது.

     18. கோவிலில் கிழக்கு கோபுர வாசலில் கலி 4556 ஆம் ஆண்டில்
தமிழ்க்கல்வெட்டும் வடக்குப் பக்கத்தில் உள்ள சமஸ்கிருத கிரந்த
எழுத்துக்களாலான கல்வெட்டும் இங்கு சிதைந்த நிலையில் காணப்படுகிறது.
13ஆம் நூற்றாண்டின் வட்டெழுத்துக் கல்வெட்டும் இங்குண்டு. ஆங்கிலக்
கல்வெட்டுக்களும் உண்டு. கி.பி. 1937இல் மகாத்மா காந்தி இங்கு வந்ததை
ஆங்கிலக் கல்வெட்டு கூறுகிறது.

     19. மார்த்தாண்ட வர்மா (கி.பி. 1749) குளச்சல் யுத்தத்திற்குச் செல்லும்
போது 908 பொற்காசு, பட்டு, உடைவாள், போன்றவற்றை இப்பெருமாள்
திருவடியில் வைத்து வேண்டி போரில் வெற்றி பெற்றார் என்ற செய்தியைக்
கல்வெட்டுக்களால் அறியமுடிகிறது.