பக்கம் எண் :

451

77. திருவண்பரிசாரம்

     வருவார் செல்வார் பரிவாரத்திருந்த என்
     திருவாழ் மார்வற்கு என்திறம் சொல்லார் செய்வதென்
     உருவார் சக்கரம் சங்கு சுமந்திங்கும் மோடு
     ஒருபாடுழல்வான் ஒரடியாணுமுள னென்றே (3541)
                              திருவாய்மொழி 8-3-7

     என்று நம்மாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட இத்தலம்
நாகர்கோவிலிலிருந்து சுமார் 2 மைல் தூரத்தில் உள்ளது. நாகர் கோவிலில்
இருந்து இவ்வூருக்கு செல்லும் நகரப் பேருந்துகளும் உண்டு.
நாகர்கோவிலிலிருந்து திருநெல்வேலி மார்க்கம்.

     இத்தலம் பற்றிய செய்திகள் புராணங்களில் ஆங்காங்கே விரவிக்
கிடக்கின்றன. மலையாளத்து நூல்கள் பரக்கப் பேசும் இதன் வரலாறு மிகத்
தொன்மையானதும், எத்தனையோ சதுர்யுகங்களுக்கு முந்தியது என்பதும்
இத்தலத்தில் காணப்படும் கோவில் பற்றிய குறிப்புகளில் காணப்படுகிறது.

புராண வரலாறு

     ஒரு காலத்தில் சப்தரிஷிகள் எழுவரும் திருமாலைக் காணும் முகத்தான்
சுசீந்திரத்திற்கு அருகாமையில் இருக்கும் ஒரு இடத்தில் (தற்போது ஆஸ்ரமம்
என்று அழைக்கப்படும் கிராமம்) தவஞ்செய்ய அவர்கட்கு இறைவன்
சிவரூபமாய் காட்சியளிக்க, தாங்கள் இறைவனை மஹாவிஷ்ணு ரூபத்திலேயே
தரிசிக்க விரும்பியதால், சுசீந்தரத்திற்கு 4 மைல் தொலைவில் உள்ள
சோமதீர்த்தம் என்ற இடத்தில் மீண்டும் தவம் செய்ய, தவத்தின் கடுமையை
மெச்சிய ஸ்ரீமந் நாராயணன் மஹாவிஷ்ணு வாக அவர்கட்கு காட்சி கொடுக்க
எந்நாளும் இதேபோன்ற திருக்கோலத்தில் இங்கே எழுந்தருளி பக்தர்களின்
பாவம் போக்கி மோட்சம் நல்கிட வேண்டுமென்று கேட்க திருமாலும்
அதற்கிசைந்து அவ்வண்ணமே செய்வதாக ஒப்புக்கொண்டனர்.

     இதனால்தான் இங்கு அமர்ந்துள்ள பெருமாளைச் சுற்றி 7 ரிஷிகள்
சூழ்ந்துள்ள திருக்கோலத்தை இன்றும் காணமுடிகிறது.

     இத்தலத்தைப் பற்றி பிறிதொரு கதையும் உண்டு. பகவான் நரசிம்ம
அவதாரங்கொண்டு இரண்யனை வதம் செய்து விட்டு மிகவும் கோபம்
அடங்காதவராய் இருந்த போது லட்சுமி பயந்துபோய் இவ்விடம் வந்து அவர்
சாந்த மூர்த்தியாக