பக்கம் எண் :

452

வேண்டுமென தவம்செய்ததாகவும், பின்பு பிரகலாதனின் பிரார்த்தனைக்கு
இணங்கி சாந்தமடைந்த எம்பிரான் தேவியைத் தேடி இவ்விடம் வர லட்சுமி
மிகவும் ஆனந்தம் அடைந்து பகவானின் திருமார்பில் நித்யாவாசம் செய்ய
எத்தனித்து உள்புகுந்து கொண்டாராம்.

     திருவாகிய இலக்குமியை தன் சரீரத்திலே இவ்விடத்தில் பெருமாள்
ஏற்றுக்கொண்டதால் இப்பிரானுக்கு திரு+வாழ்+மார்பன் திருவாழ்மார்பன்
என்பது திருநாமம்.

     இப்பகுதியில் திருவெண்பரிசாரம் என்றால் வெகு சிலருக்கே தெரியும்.
திருப்பதிசாரம் என்பதே இவ்வூருக்குச் சகலரும் அறிந்த பெயராக உள்ளது.

     திருவாகிய இலக்குமி தனது பதியாகிய மஹாவிஷ்ணுவை இவ்விடத்தில்
சார்ந்ததால் திருப்பதி சாரம் என்பதே இத்தலத்திற்குப் பொருத்தமான பெயர்
என்று இவ்வூர்வாழ் பெரியோர் பகர்கின்றனர்.

     இதனாற்றான் இங்கு தாயாருக்கு தனிச் சன்னதியோ தனி விக்ரகமோ
கிடையாது. ஏகாந்தத்தில் இருவரும் ஒருமிக்கவே சேவை சாதிக்கின்றனர்.

மூலவர்

     திருவாழ்மார்பன்

தாயார்

     கமலவல்லி நாச்சியார்

தீர்த்தம்

     லட்சுமி தீர்த்தம்

விமானம்

     இந்திர கல்யாண விமானம்

காட்சி கண்டவர்கள்

     காரி, உடைய நங்கை, லட்சுமி, கருடன், சப்த ரிஷிகள்

சிறப்புக்கள்

     1. இங்குள்ள மூலவர் கடுகு, சர்க்கரை மற்றும் மலைதேசத்து
மூலிகைகளால் செய்யப்பட்டுள்ளதால் (சூடிப்புனயப் பட்டுள்ளதால்) இவருக்கு
திருமஞ்சனம் கிடையாது.

     2. நம்மாழ்வாரின் அன்னை ஸ்ரீஉடையநங்கை அவதரித்த தலம்.