பக்கம் எண் :

454

     8. இப்பெருமான் பிரஸன்ன மூர்த்தியாகி 4 கரங்களுடன் சங்கு
சக்கரங்களுடன் காட்சியருளுவது கண்கொள்ளாக் காட்சியாகும்.

     9. நம்மாழ்வார் குழந்தையாகத் தவழ்ந்துள்ளது போன்ற மிக அழகிய
விக்ரகம் இங்கு ஒன்றுள்ளது.

     10. நம்மாழ்வாரால் மட்டும் மேலே குறிப்பிட்ட ஒரே பாசுரத்தில்
மங்களாசாசனம் செய்யப்பட்டவர்.

     11. இப்பெருமாள் சங்கு சக்கரங்களோடு காட்சி தரும் மாட்சிமை
நம்மாழ்வாரையே கவர்ந்திருப்பதை தலைப்பில் இட்ட பாடல்மூலம் அறியலாம்.