| என்றும் பெயர். இந்தச்சுற்றில்தான் தங்கமுலாம் பூசப்பட்ட துவஜஸ்தம்பம் (கொடிமரம்) உள்ளது. இது 102 தங்கத் தகடுகள் பதிக்கப்பட்ட கொடிமரம் ஆகும். விஜயநகரத்து மன்னர்களால் இக்கம்பம் உண்டாக்கப்பட்டதென அறியமுடிகிறது. உள்கோடை மண்டபம், பரமபதவாசல் டோலோத்ஸ்வ (ஊஞ்சல் உற்சவம்) மண்டபமும் இதில் உண்டு. 2வது திருமதில் தபோலோகம் எனப்படும் 2வது திருச்சுற்றுக்கு ராஜ மகேந்திரன் திருச்சுற்று என்பது பெயர். ராஜமகேந்திர சோழனால் இது கட்டப்பட்டது. இதன் நுழைவாயிலுக்கு நாழிகேட்டான் வாசல் என்பது பெயர். பெருமாள் இவ்வாசலுக்கு வந்ததும் நாழிகை என்ன என்று கேட்கும் வழக்கம் இருந்ததால் இப்பெயர் உண்டாயிற்றென்பர். இதில் யாகசாலை, சேனை முதலியார் சன்னிதி, கண்ணாடி அறை, திருப்பரிவட்டாரங்கள் வைக்குமிடம் ஆகியன உண்டு. விஜயரங்க சொக்கநாத நாயக்கர் தம் குடும்பத்துடன் நின்றுள்ள காட்சியும் இத்திருச்சுற்றில்தான் உண்டு. கற்பூரப் படியேத்தம், என்னும் விசேட நிகழ்ச்சி கார்த்திகை மாதம் கைசிக ஏகாதசியன்று நடைபெறும். இந்நிகழ்ச்சியைக் காண்பதற்காகவே விஜயரங்க சொக்கநாத நாயக்கர் தமது குடும்பத்துடன் வந்தாரென்றும் வருவதற்குள் இந்நிகழ்ச்சி முடிந்துவிட்டதால் அடுத்த ஆண்டு இந்நிகழ்ச்சியைக் காணவேண்டுமென்று ஓராண்டுக்காலம் தம் குடும்பத்துடன் தங்கிவிட்டாரென்றும் கூறுவர். ராஜகம்பீரமான தோற்றத்துடன் உள்ள இவர்களின் சிற்பங்கள் காண்பதற்கும் வசீகரமானவையாகும். ஸ்ரீசைலேச தனியனை பெருமாளால் குழந்தைவடிவில் மொழியப்பட்டது. இந்தத் திருச்சுற்றில்தான். இதில் உள்ள கிளி மண்டபம் திருமங்கையாழ்வாரால் கட்டப்பட்டதென்பர். துலுக்க நாச்சியார் சன்னிதியும் இத்திருச்சுற்றில்தான் உண்டு. முதல் திருமதில் சத்தியலோகம் எனப்படும் இந்த முதல்ச் சுற்றை உண்டாக்கியவன் சோழமன்னன் தர்மவர்மன் என்று அறியப்படுகிறது. இதன் நுழைவாயிலுக்குத் திருஅணுக்கன் திருவாசல் என்பது பெயர். கருவறை (மூலஸ்தானம்) அமைந்துள்ளது இந்தச் சுற்றில்தான். பேரழகுடன் பெருமாள் சயனித்திருப்பது இந்த சத்திய லோகத்தில் தான். கருவறைக்கு முன் உள்ள மண்டபத்திற்கு ரங்கமண்டபம் என்று பெயர். இதை காயத்ரி மண்டபம் என்றும் சொல்வர். இதில் 24 தூண்கள் உண்டு காயத்ரி மந்திரத்தின் 24 எழுத்துக்களாக இதைக்கூறுவர். |