10. குறுங்குடிக்கு வைகுந்தம் கூப்பிடுதூரமே என்று சொல்வது போல் வைகுண்டம் இங்கிருந்து மிக அருகில் என்பது பெரியோர் வாக்கு. 11. இன்றும் நம்பாடுவான் வேடம் பிரம்ம ராட்சசன் வேடம் கிழப்பிராம்மணன் வேடம் போட்டு கைசிக புராணத்தை நாடகமாக நடத்திடும் பழக்கம் இங்குண்டு. 12. சேர மன்னர்கள் இத்தலத்திற்கு கைங்கர்யம் செய்தனர் பரவுதய மார்த்தாண்டம் பந்தற்கீழுண்மை வருராம தேவமகராசன் தருபீடத் துறப்பனமாய் பூமகளும் ஓங்கு நிலமகளும் விற்பனமாய் நீங்காத மேன்மையான்” | என்று அழகிய நம்பியுலாவில் வரும் பாடலால் உதயமார்த்தாண்டர் என்னும் சேர அரசரால் செய்யப்பட்ட பந்தலின் கீழ், ராமவர்மன் என்ற அரசனால் (இராமதேவன்) செய்யப்பட்ட பீடத்தின் மேல் திருக்குறுங்குடி நம்பி எழுந்தருளியிருந்தார். இதில் குறிக்கப்படும் மன்னர்கள் யாவரும் சேர நாட்டினரே. 13. இத்தலத்தில் உள்ள மணியின் மேற்புரத்தில் செய்துங்க நாட்டுச் சிறைவாய் மன்னாதித்தன் தென் வஞ்சியான் என்ற பாடல் செய்துங்க நாடு என்று குறிக்கப்படும், திருவிதாங்கோட்டு அரசர்கள் இத்திருத்தலத்திற்கு பல நற்பணிகள் செய்ததை அறிய முடிகிறது. 14. ஸ்ரீரங்கத்து அரங்கன் திருப்பானாழ்வாரை ஆட்கொண்ட விடத்து ஸ்ரீலோக சாரங்கன் என்னும் முனிவர் மூலமே ஆட்கொண்டார். ஆனால் நம்பாடுவானை இப்பெருமான் நேரிலேயே சென்று ஆட்கொண்டார். 15. இங்குதான் நாத முனிகளின் வம்ஸத்தவர்கள் சுமார் 50 குடும்பங்களுக்குமேல் வசித்துவந்தார்கள். அவர்கள் தமது வீட்டின் பின்னால் உள்ள அவரைக் கொடி பந்தலின் கீழ் தனது குமாரர்கட்குத் தாளத்துடன் பாசுரங்களைக் கற்று கொடுக்கும் சமயம் இந் நம்பியே ஒரு வைணவன் வேடத்தில் வந்து அதைக் கேட்டு ரசித்தாராம். “வளர் அரையர் திருமனையில் வந்து அவரை நிழல்தனில் | |