பக்கம் எண் :

466

     வன்காணம் கேட்ட பெருமான்’
     என்ற பாடலால் உணரலாம்.

     16. இராமானுஜர் திவ்ய தேச யாத்திரை மேற்கொண்டு செல்லுமிடத்து
மைசூரில் உள்ள திருநாராயணபுரம் செல்ல அங்கு கைங்கர்யத்திற்கு
ஸ்ரீவைஷ்ணவர் வேண்டுமென்று இராமானுஜரிடம் விண்ணப்பம் செய்ய,
இராமானுஜர் திருக்குறுங்குடி ஜீயருக்கு கடிதம் மூலம் தெரிவித்தார். அரையர்
வம்சத்தில் வந்த ஒருவரையும் அங்கு அனுப்பி வைத்தார். இன்றும் அங்கு
அவர்கள் திருக்குறுங்குடி தாசர் என்ற பெயரில் ஸ்தானிகம் (கைங்கர்யம்)
செய்து வருகின்றனர்.

     17. இதனை தட்சிண பத்ரி (தென்பத்ரிசாச்சிரமம்) என்று வடவாணர்
கூறுவர்.

     18. இப்பெருமாளை சேவிக்க ஒரு சமயம் இராஜாக்கள், கூட்டம்
கூட்டமாய் வந்தபோது வானமாமலை மூர்த்திகளான ஸ்ரீதெய்வநாயகன்
ஸ்ரீவரமங்கைத் தாயார் முதலானோர்கள் பூமியில் அமிழ்ந்து இருப்பதாகவும்,
அவ்விடம் சென்றால் எந்த இடத்தைச் சுற்றிக் கருடன் பறக்கிறானோ அந்த
இடத்தில் தோண்டினால் அவர்கள் வெளிப்படுவார்கள் என்று (அசரீரீயாய்)
சொல்ல அவ்விதமாய் செய்துதான் வானமாமலை திவ்யதேசத்தை ஸ்தாபித்தனர்
என்பர்.

     எனவே வானமாமலை திவ்ய தேசம் உருவாவதற்கும் இத்திருப்பதியே
காரணமாயிற்றென்றால் அது மிகையல்ல.

     19. இச்சன்னதி திருக்குறுக்குடி ஜீயர் ஆதிக்கத்தில் உள்ளது.
இராமானுஜரால்தான் இந்த ஜீயர் மடம் உருவாக்கப்பட்டது.

     20. இங்கிருந்து சுமார் 3 பர்லாங் தூரத்தில் திருப்பாற்கடல் என்ற
ஓடையருகே திருப்பாற்கடல் நம்பி சன்னதியும் உள்ளது. இதே போன்று
இங்கிருந்து 6 1/2 மைல் தூரத்தில் மலைமேல் உள்ள ஒரு குன்றில் மலைமேல்
நம்பி சந்நிதியும் உள்ளது. ஒரு ராட்சசன் ஒரு பிராம்மணனைக் கொல்லவர,
கொல்வது பாவமென்று பிராமணர் சொல்ல, அதுதான் எனது தொழில் என்று
ராட்சசன் சொல்ல இருவருக்கும் விவாதம் முற்ற வேடன் வடிவங்கொண்டு
வந்த பெருமான் அவ்விருவருக்கும் உபதேசம் செய்து திருப்பாற்கடலில்