பக்கம் எண் :

467

ஸ்நானம் செய்ய இருவரும் மோட்சம் பெற்றனர் என்பது திருப்பாற்கடல்
ஸ்தல வரலாறு.

     21. திருக்குறுங்குடி மேன்மையை நன்கு அறிந்து கற்றாலே அவன்தான்
முழு வைணவன் அப்போதுதான் வைணவ சித்தியுண்டாகும். வைணவ பூரண
ஞானமே திருக்குறுங்குடி எம்பெருமானின் திவ்ய விஷயங்களை அறிந்து
அவன்பாற் அன்பு பூண்டலால் ஏற்படுகிறது என்று நம்மாழ்வாரே
அறுதியிட்டுள்ளார்.
 

     “அறிவரிய பிரானை ஆழியங்கையனயே அலற்றி
     நறிய நன்மலர் நாடி நன்குருகூர் சடகோபன் சொன்ன
     குறிகொள்ளாயிரத்துள் இவை பத்தும் திருக்குறுங்
                                   குடியதன்மேல்
     அறியக் கற்று வல்லார் வைட்டணவர் ஆழ்கடல்
                                  ஞாலத்துள்ளே”

     22. புகழேந்திப் புலவர் கூட இத்தலம் பற்றி பின்வருமாறு
பாவிசைத்துள்ளார்.

     எட்டெழுத்தைக் கருதிற் குறித்திட்டு
          நித்தம் பரவும்
     சிட்டர்கட்கு திருப்பொற்பதத்தை
          சிறக்கத் தருமவ்
     வட்டநெட்டைப் பணிமெத்தை
          யதிற்கிட வாரிசப்போ
     குட்டினத்துக் குலம் தத்தி
          முத்தீனும் குறுங்குடியே.

     23. ஆழ்வார்களில் பெரியாழ்வார், திருமழிசையாழ்வார்,
திருமங்கையாழ்வார், நம்மாழ்வார், ஆகிய நான்கு ஆழ்வார்களால் 40
பாசுரங்களில் இத்தலம் மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ளது.

     24. பிள்ளைப் பெருமாளய்யங்கார், இராமானுஜர் ஆகியோர்
மங்களாசாசனம் செய்துள்ளனர்.

     25. ஒட்டக்கூத்தரும் தமது தனிப்பாக்களில் இத்தலம் பற்றி
விரிந்துரைத்துள்ளார்.