79. திருவரமங்கை என்னும் வானமாமலை
ஏனமாய் நிலம் கீண்ட என்னப்பனே கண்ணா என்றும் என்னையாளுடை வான நாயகனே மணி மாணிக்கச் சுடரே தேனமாம் பொழில் தண் சீரிவர மங்கலத்தவர் கைதொழவுறை வான மாமலையே அடியேன் தொழ வந்தருளே (3166) திருவாய்மொழி 5-7-6 |
என்று நம்மாழ்வாரால் திருவாய் மலர்ந்தருளப்பட்ட சீரீவரமங்கை
என்னும் திவ்ய ஸ்தலத்திற்கு வானமாமலை, நாங்குநேரி, தோத்தாத்ரி
ஸ்ரீவரமங்கை நகர் என்ற பல்வேறு பெயர்களும் உண்டு.
இத்தலத்திற்கு திருநெல்வேலியிலிருந்து ஏராளமான பேருந்துகள். உண்டு.
திருநெல்வேலியிலிருந்து திருக்குறுங்குடி செல்லும் பேருந்துகளும் இத்தலம்
வந்து செல்கின்றன. திருநெல்வேலியிலிருந்து முக்கால் மணி நேரத்தில்
இத்தலம் அடையலாம்.
பிரம்மாண்ட புராணம், ஸ்கந்த புராணம் போன்றவற்றில் இத்தலம்
பேசப்படுகிறது. நரசிம்ம புராணத்தில் 16 அத்தியாயங்களில் இத்தலத்தின்
பெருமை பற்றியும், வைணவர்களின் ஏற்றம் பற்றியும், கங்கை காவிரியின்
மகத்துவம் பற்றியும் பெரிதும் விரித்துரைக்கப்பட்டுள்ளன. புராணத்தில்
சிவன் நாரதரிடம் இத்தலம் பற்றிய பெருமைகளை எடுத்துச் சொன்னதாகச்
சொல்லப் பட்டுள்ளது.
உரோமச முனிவர் தவஞ்செய்து திருமாலைக் கண்டதால் உரோம
ஷேத்திரம் என்றும், ஸ்ரீவரமங்கையாக திருமகள் இவ்விடத்தில் வந்து வளர்ந்து
பிறகு எம்பெருமானை மணந்து கொண்டதால் ஸ்ரீவரமங்கை (சீரிவரமங்கல
நகர்) எனவும், ஆதிசேடன் இங்கு தவமியற்றி திருமாலுக்கு அணையாக
இருக்கும் பேறு பெற்றதால் நாகனை சேரி எனவும் மரங்கள் நிறைந்த வனமும்,
மலையும் சூழ்ந்த இடமாதலின் வானமாமலை எனவும் இங்குள்ள
திருக்குளத்தை நான்கு ஏரிகளாக வெட்டியதால் நான்கு + ஏரி நான்குநேரி
எனவும் அந்த நான்கு ஏரிகளின் கூர்மையான முனைகள் சந்திக்கும்
நடுமையப் பகுதியில் அமைந்ததால் நான் +