பக்கம் எண் :

469

கூர் + நேரி என்பது காலப்போக்கில் நாங்குநேரி என பேச்சு வழக்காயிற்று.
வடமொழியினர் தோத்தாத்தரி என வழங்குவர் வைணவ பெரியவர்கள்
தோத்தாத்திரி என்றேயழைப்பர்.

     தாமிரபரணியின் தெற்கே ஒரு யோஜனையும் தென் கடலுக்கு வடக்கே
இரண்டு யேஜனையும், கிழக்கு கடலுக்கு மேற்கே மூன்று யோஜனை
தூரத்திலும் இந்த தோத்தோத்திரி உள்ளது என புராணம் இதற்கு எல்கை
காட்டுகிறது.

புராண வரலாறு

1. நாய் மோட்சம் பெறுதல்

     சிந்து நாட்டரசன் வேட்டைக்கு சென்றபோது அவனை எட்டுக்கால்
யானை ஒன்று விரட்ட தனது படைக்கூட்டத்தை விட்டுப் பிரிந்து
நெடுந்தொலைவு அலைந்து பசியால் மிக வாடினான். அந்நிலையில் தூரத்தே
தெரிந்த குடிலொன்றுக்கு செல்ல அங்கு யாருமில்லாமல் அறுசுவை
உணவுமட்டும் இருப்பதை கண்டான். பசிபொறுக்காத மன்னன் அதை எடுத்து
உண்டுவிட்டான்.

     சற்று நேரம் கழித்து அக்குடிசைக்குரிய குசானன் என்னும் முனிவன்
அங்குவந்து தான் விஷ்ணுவின் பூஜைக்கு வைத்திருந்த உணவை உண்ட
இம்மன்னனைக் கடுஞ்சினத்துடன் நோக்கி நீ உண்ட உணவு உனக்கு
நஞ்சாகுக. நீ பருகிய நீர் கள்ளாகுக. காய்கறிகள் பசுமாமிசம் ஆகுக. நீ
நாயாக மாறி அலைந்து திரிக என சபித்தான்.

     முனிவனின் பக்தி மேன்மையினையும் தனது தவறினையும் உணர்ந்த
மன்னன் சாப விமோசனம் வேண்டி நின்றான். அதற்கு அந்த முனிவன்,
இவ்வுலகில் மிகச் சிறந்த தீர்த்தத்தில் நீராடின மாத்திரத்தில் உன் சாபம்
தீரும் என்றார்.

     ஒரு நாள் விலங்குகளை வைத்து வேட்டையாடுவோன் ஒருவன்
அந்நாயைப் பிடித்து பல வேடிக்கைகளைக் காட்டி பல நாடுகளுக்குச் சென்று
வரும் நிலையில் ஒரு நாள் மரங்களடர்ந்த இச்சோலைக்கு வந்து
(வானமாமலை) ஓய்வெடுத்து அங்கிருந்த (சேற்றுத் தாமரை என்ற
தெப்பக்குளத்தில்) நீராடினான். உடன்வந்தோறும் நீராடினர். இதைக்கண்ட
நாயும் அவ்விதமே செய்ய நாயுருவம் மறைந்து அரசனாக நின்றான்.
இதைக்கண்டு அனைவரும் அதிசயத்து நிற்க, தனது பூர்வக் கதையை
தெளிவுற விளக்கி தன்னை அழைத்துவந்தவனை தனது தந்தைக்கொப்பான்
என்று கூறி, இச்ஷேத்ரத்து எம்பெருமானை வழிபட்டு பல நாள் தங்கியிருந்து
அவ்வேடுவனோடு தனது நாட்டை அடைந்தான்.