சிறப்புக்கள் 1. ஸ்ரீவைகுண்டத்தில் நின்ற பெருமானுக்கு குடைப்பிடித்த ஆதிசேடன் இங்கு அமர்ந்த பெருமானுக்கு குடைப்பிடித்துள்ளான். 2. பிரம்மாவின் புத்திரனான கனக முனிவர் இத்தலத்தின் வரலாற்று மேன்மையை தட்சிண கங்கை என்று சொல்லப்படும் காவிரியின் தென்கரையில் தர்மபுரம் என்ற நகரத்தைப் பரிபாலித்து வந்த மன்னனுக்கு கூறியதாகவும் புராணக் குறிப்புள்ளது. 3. நம்மாழ்வாரால் மட்டும் மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ளது. 4. மணவாள மாமுனிகளும் இங்கு எழுந்தருளினார். |