பக்கம் எண் :

508

     அங்கிருந்த அந்தணரும் திருமாலின் அருள்பெற
வழிபாடியற்றியவர்களும் இவன் கீழ்க்குலத்தான் என்று கருதி வெறுத்து ஒதுக்க
தாந்தன் அங்கிருந்து வடகிழக்கே சென்று கூப்பிடு தூரத்தில் பொருணலின்
வடகரையில் ஆதிநாத வேதியை அமைத்து வழிபட்டான்.

     திடீரென்று தாந்தனை வெறுத்தொதுக்கிய அந்தணர்கட்கு கண்தெரியாது
போகவே இதற்கு யாது காரணமென அவர்கள் பெருமாளை இறைஞ்சி நிற்க
பரமபக்தனான தாந்தனை வெறுத்தற்கு இதுவே தண்டனை யென்றும்
அவனிடம் சென்று மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அசரீரியாய் ஒளியுடன்
ஒரு சப்தம் கேட்கவே அனைவரும் அப்படியே சென்று தாந்தன் இருப்பிடம்
அடைந்ததும் கண்ணொளி பெற்றனர்.

     தாந்தனுக்குத் தம் தேவியோடு காட்சியளித்து ஆட்கொண்டார் பகவான்.
இன்றும் இங்குள்ள அர்த்த மண்டபத்தில் முதற்படிக்கட்டில் தாந்தன் உருவம்
பொறிக்கப்பட்டுள்ளது. அவன் ஆதிநாதனை வழிபட்ட ஸ்தலம் அப்பன்
கோவில் என்று வழங்கி வருகிறது. இதைச் செம்பொன் மாடத் திருக்குருகூர்
என்றும் வழங்குவர். இவன் மகத்துவத்தால் இத்தலம் தாந்த ஷேத்ரமென்று
புராணங்களில் புகழ்ந்துரைக்கப்பட்டுள்ளது.

சங்கன் வீடுபெற்றது.

     கொலைத் தொழில் புரிந்து உயிர் வளர்க்கும் வேடன் ஒருவன் விந்திய
மலையில் தாந்தன் தங்கியிருந்த ஆலமரத்தடியில் கொஞ்சநேரம் வாசம்
தங்கியதால் மறுபிறப்பில் சங்கன் என்னும் முனிவனாகப் பிறந்து கடுந்தவம்
செய்து கொண்டிருந்தான். அப்போது அங்குவந்த நாரதர் இந்தக்
கடுந்தவத்தின் காரணத்தை வினவ, “நான் எட்டுத் திக்கும் காவல் புரியும்
காவலர்களில் ஒருவனாக ஆவதன் பொருட்டே இந்த தவத்தை
மேற்கொண்டுள்ளேன்” என்று கூற. நாரதர் அவனை நோக்கி, அதைவிட
மேலான பதமளிக்கும் நாராயணனைக் குறித்து தவமிருந்து பிறவா
நிலைபெறுவாய் என்று தெரிவித்தார். அதற்கு நான் என்ன செய்ய
வேண்டுமென சங்கன் வினவ நீ இப்போது தாங்கியிருக்கும் இதே
பெயரைக்கொண்ட சங்காக உவர்க்கடலில் பிறந்து தண்பொருநல் நதிகடலில்
கலக்கும் இடத்திலிருந்து ஒரு காத தூரத்தில் உள்ள குருகூரில் ஏறி ஆதிநாத
வேதியை 1000 ஆண்டுகள் சூழவந்து அவன் அருள் வாய்க்கப் பெறுவாயாக
என்று வாழ்த்தியருளினார்.

     அப்படியே சங்கனும் தன் நோன்பின் வலிமையால் சங்காகி தாமிரபரணி
நதிவழிவந்து வடகரையில் உள்ள திருப்பதியைக் குருகூர் என்று எண்ணி
வழிபட மீண்டும்