| அங்குவந்த நாரதமுனிவர் இது தாந்தன் வழிபட்ட இடமென்றும் சற்று தெற்கே தள்ளியிருப்பது தான் ஆதிநாதர் கோவில் என்றும் எடுத்துரைத்து தினந்தோறும் பகலில் வந்து ஆதிநாதரை பூஜித்து இரவில் கடலிற் சென்று சங்காக வாழும் வாழ்க்கையை மேற்கொண்டிருந்தான். ஒருநாள் இந்த சங்கவரசன் தனது இனங்களுடன் வந்து கொண்டிருக்கும் போது ஒரு திமிங்கலம் எதிர்ப்பட்டுச் சங்கங்கள் வராது தடுக்கவே, சங்கன் ஆதிநாதரை மனமுருகி வேண்ட ஒரு மானிடன் கடலில் தோன்றி அந்தத் திமிங்கலத்தை விழுங்கிச் சென்றான். இதன்பின் எவ்வித தடையுமின்றி சங்கன் வந்து சென்று 1000 ஆண்டுகள் கழியவே எம்பெருமான் கருட வாகனத்தில் தமது தேவியருடன் காட்சி கொடுத்து சங்கனின் தவத்தை மெச்சி சங்கனுக்கும் உடனிருந்த சங்கங்களுக்கும் மோட்சம் நல்கினார். சங்கினங்களுடன் சங்கன் ஏறிவந்த துறைக்கு “திருச்சங்கணித்துறை” என்று இன்றும் பெயர் வழங்குகிறது. சேஷ ஷேத்திரம் இராமவதாரம் முடிவதற்கு மூன்று நாள் இருக்கும்போது பெருமானைப் பார்க்க எமதர்மராஜன் வந்தான். அப்போது இராமர் இலக்குவனை நோக்கி தம்பி, யாரையும் இனிமேல் உள்ளே அனுமதியாதே என்றார். சில நாழிகை கழித்து கடைசியாக ஒரு முறை இராமனைக் கண்குளிரக் கண்டுவிடுவோமென துர்வாச முனிவர் வந்தார். இவரைத் தடுத்தால் முனிவரின் சாபத்திற்கு ஆளாகநேரிடும் என்றெண்ணி இலக்குமணன் தடுக்கவில்லை. துர்வாசரை உபசரித்து அனுப்பிவைத்த ராமன் என் ஆணையை மீறி மரமாக நின்றமையால் நீ மரமாக இருக்கக் கடவாய் என்றார். இலக்குமணன் இராமனின் இரண்டு கால்களையும் பற்றிக்கொண்டு நான் நின்னைவிட்டு பிரிந்திருப்பது இயல்போ அண்ணா, இது உமக்கே தெரியாதோ என்று மண்டியிட்டு நின்றான். இலக்குமனை எடுத்து ஆரத் தழுவிய இராமன் நான் இந்த இராமாவதாரத்தில் சீதையை காட்டில் வாழச் செய்த பாவத்தை போக்க 16 ஆண்டுகள் அசையா பிம்பமாய் பிறக்க வேண்டியுள்ளது. அப்போதும் நான் உன் மடி மீது அமர்ந்துகொள்ள ஆசைப்பட்டுத்தான் உன்னை மரமாக நிற்கச் சொன்னேன். அந்த மரப்பொந்தில் நான் வந்து அமர்வேன் என்றார். இங்கிருந்து நீ புறப்பட்டு தாமிரபரணியின் தென்கரையில் உள்ள வராக ஷேத்திரத்தை அடைந்து ஒரு புளியமரமாக மாறப் போகிறாய். இன்னும் கொஞ்சகாலத்தில் காசிப முனிவர் காரி என்ற பெயரில் அங்கு குறுநில மன்னராகப் பிறப்பார். அவரது |