| இடையே நடந்த யுத்தத்தின் போது இத்தலத்திற்கு பாதிப்பு இல்லை. ஆங்கிலேயரை எதிர்த்து போர்புரிந்த சந்தா சாகிபு (கி.பி. 1752) பிரஞ்சுப் படைகளுடன் திருவரங்கம் தீவிற்குள்ளும், கோவிலின் வெளிபிரகாரங்களிலும் ஒளிந்து தம்மைப் பாதுகாத்துக் கொண்டனர். கி.பி. 1759இல் கிரில்லன் என்னும் படைத்தளபதி இக்கோவிலில் மறைந்துள்ள வீரர்களைத் தாக்கினான். ஆயினும் கோவிலுக்கு எவ்வித சேதமும் இல்லை. கி.பி.1809-1947 கி.பி. 1809 இல் கர்நாடகம் மற்றும் தமிழகத்தில் ஆற்காடு நவாபின் ஆட்சிப் பகுதிகள் மற்றும் ஒருசில பகுதிகள் கிழக்கிந்தியக் கம்பெனியின் கீழ்வந்தது. வேல்ஸ் என்னும் மாவட்ட ஆட்சித் தலைவனின் கீழ்வந்தது, இத்திருக்கோவிலின் நிர்வாகம். இவர் 1803இல் திருவரங்கத்தின் பலவரலாற்று நூல்களை ஒருங்கே கொண்டு வந்து தனி முழுநூலாக வெளியிட, எழுதப் பணித்தார். பின்னர் அந்த நூலின் பிரதி ஒன்றை கோவில் ஆட்சியாளர்கள் (ஸதானத்தார் அல்லது ஸ்தானிகர்) ஐவரின் முத்திரையுடன் கோயிற் முன்பகுதியில் உள்ள ஒரு கருங்கற்பாறைக்கு கீழ் உள்ள சுரங்கத்தில் வைத்துப் பேணிக் காத்தார். தொண்மை முறைப்படியான கோவில் நிர்வாகத்தில் தலையிடாது மேற்பார்வை கண்காணிப்பாளர்களாக ஆங்கிலக் கலெக்டர்கள் இருந்து வந்தனர். 1875 இல் இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட ஏழாம் எட்வர்டு இத்திருக்கோவிலுக்கு ஒரு மிகப் பெரிய பொற்குவளையை அளித்தார். அது இக்கோவிலின் கருவூலப் பொருட்களில் இன்றும் உள்ளது. 1947 இல் இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு கோவில்களும், சமய நிறுவனங்களும் புதிய சட்ட அமைப்பின் கீழ்வந்து நம்மவர்களாலேயே நிர்வாகிக்கப்பட்டு வருகிறது. 1966 இல் அமெரிக்காவின் யுனெஸ்கோ நிறுவனம் இக்கோவிலுக்கு தொழல் நுட்ப உதவி அளிக்க ஒரு நிபுணரை அனுப்பியது. 1968 இல் மேலும் இருவரை அனுப்பியது. இவ்வாறு இந்துக்களுக்கு மட்டுமன்றி உலகத் தோரனை வருக்கும் பொதுவான செல்வமாகி விட்டார் நம் திருவரங்கச் |