| செல்வர். இவ்வுரிமையை உறுதிசெய்வதுபோல் 1987இல் அரங்கனுக்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய கோபுரத்தை ஜீயர் ஸ்வாமிகள் அமைத்துக் கொடுத்து விட்டார். ஆம் திருவரங்கத்து இன்னமுது, வைணவர்களுக்கு மட்டுமன்றி, இந்துக்களுக்கு மட்டுமன்று, உலகத்தின் அனைத்து மக்களுக்கும் உரிய ஒரு தனிச் சொத்து. அதுதான் வைணவ சம்பிரதாயமும் ஆகும். அதனால் தான் ஆண்டாளும் “வையத்து வாழ்வீர்காள்” என்று வையத்து மாந்தரையெல்லாம் விளித்தார். |