பக்கம் எண் :

520

     எம்பெருமான் (வராஹ ரூபியாய் தான் இருந்த போது பிராட்டி
வேண்டியபடி) திருமகள் ஆண்டாளாக அவதரிக்கும் காலம்
நெருங்குவதையெண்ணி தனது புள்ளரையனாகிய கருடனைப் பார்த்து
வில்லிபுத்தூரில் வாசம் செய்யும் மூங்கில் குடி என்னும் வம்சத்திலிருக்கும்
முகுந்தர் என்பவருக்கு 4வது புத்திரனாக விஷ்ணுசித்தர் என்ற பெயரில்
அவதரிக்க கடவாய் என்ன அவ்விதமே அவதரித்து, விஷ்ணு சித்தன் என்ற
பெயர் பூண்டு, திருமால் மீது மிக்க பக்தி கொண்டு நித்ய கைங்கர்யங்களைச்
செய்து இறைவனுக்குப் பாமாலையும் பூமாலையும் சூட்டி வருங்காலையில்
மதுரையை ஆண்ட வல்லபன் என்னும் பாண்டிய மன்னன் மறுமைப் பேற்றில்
பேரவா கொண்டவனாக பல மதங்களையும் பற்றி ஆராய்ந்து வருங்காலையில்
எது உண்மையிலேயே மோட்சம் கொடுக்க வல்லதென வினவ பற்பலரும்
பற்பல விதமாய்ச் சொல்ல இறுதியிலே சகல மதத்தாரையுமழைத்து மோட்சம்
தரத்தக்க மதம் (மார்க்கம்) எதுவென்று நிர்ணயஞ் செய்ய ஒரு
போட்டியொன்று வைத்தான். மந்திரத்தால் செய்யப்பட்ட பொற்கிழியொன்றைக்
கட்டுவித்து சகல மதத்தாரையும் அழைத்து தத்தம் மதமே சிறந்ததென
வாதிடச் சொல்லி, யாருடைய மதம் சிறந்தது (மோட்சம் தரத்தக்க வல்லது)
என்று நிருபிக்கும் தருவாயில் பொற்கிழி தானே அறுபட்டு விழ
வேண்டுமென்றும் ஏற்பாடு செய்ய எண்ணற்ற மதத்தினரும் வந்து வாதம் பல
புரிந்து வருங்காலை, விஷ்ணுசித்தன் கனவிலே தோன்றிய எம்பெருமான்
அவரைச் சென்று வாதிடுமாறு சொல்ல அவ்விதமே அவரும் செய்து
பரதத்துவம் என்னும் மோட்சத்தைக் கொடுக்கவல்லது ஸ்ரீவைஷ்ணவமே
என்று நிருபிக்க பொற்கிழி அறுபட்டு வீழ்ந்தது, பாண்டியன் மிகவும் மகிழ்ந்து
இவரைப் பலவாறு, கொண்டாடி துதித்து பட்டர்பிரான் என்னும்
பட்டத்தையுமளித்தான்.

     பாண்டியன் கொண்டாட பட்டர்பிரான்
          வந்தாரென்று ஈண்டிய சங்கம் எடுத்தூத
     வேண்டிய வேதங்கள் ஓதி விரைந்து கிழி அறுத்தான்
          பாதங்கள் யாமுடைய பற்று என்ற பாட்டினாலும்

     இதையறியலாம்.

     இதன்பின் பாண்டிய மன்னன் இவரை பட்டத்து யானை மீது ஏற்றி
நகர்வலம் வரச் செய்த தருணத்தில் எம்பெருமான் பிராட்டியோடு கருட
வாகனத்தில் இவருக்கு காட்சி தந்தருளினார் அதனைக் கண்ட விஷ்ணு சித்தர்
இப்பூவுலகில் எம்பெருமானுக்குத்