| சொல்ல அவ்விதமே வல்லப தேவ பாண்டியனிடம் பல்லக்குப் பரிவாரங் களைப் பெற்று அரங்கம் எழுந்தருளுகையில் தென்திருக் காவேரியின் மத்தியில் வந்து கொண்டிருக்கும் போது பல்லக்கிலிருந்து கோதை மறைய ஈதென்ன விந்தையென்று கோயிலுக்குள் புகுந்து காணுகையில் அரங்கனுக்கு அருகில் கோதை எழுந்தருளியிருக்க இக்காட்சியைக் கண்டு மிகவும் சிலாகித்துப் போய் வில்லிபுத்தூரார் அரங்கனடி பணிந்து இத்திருமணக் கோலத்தை வில்லிபுத்தூரிலும் காட்டியருள வேண்டுமென கேட்க, அவ்விதமே வில்லிபுத்தூர் வந்து வடபெருங்கோயிலை அலங்கரிக்க எம்பெருமான் திருமண கோலத்தில் எழுந்தருளினார். மூலவர் வடபத்ரசாயி (ரங்கமன்னார்) கிழக்கே திருமுக மண்டலம்) தாயார் (கோதாதேவி) ஆண்டாள் தீர்த்தம் திருமுக்குளம் விமானம் ஸம்சன விமானம் காட்சிகண்டவர்கள் மண்டுக மஹரிஷி, பெரியாழ்வார். சிறப்புக்கள். 1. பாண்டிநாட்டு 18 ஸ்தலங்களில் இரண்டு ஆழ்வார்கள் தந்தையும், மகளுமாய் அவதரித்தது, இந்த திவ்ய தேசத்தில் மட்டும்தான். 2. கும்பகோணத்தின் தலவரலாற்றோடு திருமலையும் ஸ்ரீரங்கமும் எவ்விதம் சம்பந்தப்பட்டதோ அதே போன்று திருமாலிருஞ்சோலையும், திருவரங்கமும் இத் தலத்தோடு சம்மந்தப்படுகிறது. 3. எம்பெருமானின் பல்வேறு அம்சங்கள் 12 ஆழ்வார்களாய் அவதார மெடுத்த காலையில், பிராட்டியே ஆழ்வாராக அவதரித்த பேறுபெற்ற ஸ்தலம். 4. தமிழ்நாடு அரசு முத்திரையில் இடம் பெற்றிருப்பது இக்கோவிலின் ராஜகோபுரமாகும். |