பக்கம் எண் :

523

     5. தற்போது கண்ணாடி மாளிகையொன்று இங்கு அமைக்கப்பட்டிருப்பது
ஒரு தனிச்சிறப்பாகும்.

     6. ஆண்டாள் அவதரித்த இடத்தில் துளசிச் செடியும், நந்தவனமும்
இன்றும் உள்ளன.

     7. வட பெருங்கோயிலுடையானாக எம்பெருமான் எழுந்தருளியுள்ள
கோயில் மிக்க தொன்மையும் பேரழகும் வாய்ந்ததாகும்.

     8. பெரியாழ்வாராலும், ஆண்டாளாளும் மங்களாசாசனம் செய்யப்பட்ட
ஸ்தலம்.

     9. தந்தைவழி பிள்ளை என்பது போல பெரியாழ்வாரும் ஆண்டாள்
தேவியும் கிருஷ்ணவதாரத்தில் மூழ்கி பேரானந்தம் அடைந்த இடம்.
பெரியாழ்வார் கண்ணனை குழந்தையாக வரித்து பூச்சூட்டி, நீராட்டி,
முலையூட்டி, கொஞ்சிக் குலாவும் தீந்தமிழ் பாக்களை தெய்வீகச் சுவை ததும்ப
வழங்கினார். ஆண்டாள் தேவியோ கண்ணனை, காதலனாக அவனுக்கு
மையல் பட்டு நிற்கும் மங்கையாக நின்று மயக்கும் பாக்களை அள்ளித்
தெளித்து இறுதியில் அவரோடு இரண்டறக் கலந்தார்.

     10. பாண்டியநாட்டோடும், வைணவ சம்பிரதாய மேன்மையோடும்
தொடர்புகொண்ட ஸ்தலம்.

     11. இதற்கருகில் உள்ள திருவண்ணாமலை தென்திருப்பதி என்று பெயர்
பெற்று திருமலைக்குச் செய்யவேண்டிய பிரார்த்தனைகள், வேண்டுதல்கள்,
இங்கேயே செய்துவிடும் பழக்கமுள்ளது. திருமலை வேங்கடவனைப் போன்றே
ஸ்ரீனிவாச மூர்த்தியாக எம்பெருமான் இங்கே எழுந்தருளியுள்ளார்.
ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து சுமார் 4கி.மீ. தொலைவில் உள்ளது.

     12. பெருமாளுடன் கருடாழ்வார் எழுந்தருளியிருப்பது இங்கு ஒரு
சிறப்பம்சமாகும்.

     13. ஸ்ரீரங்கத்தில் இருப்பதுபோல் அரையர் சேவையும் இங்குண்டு. சுதாப
முனிவர் வராஹ ஷேத்ரத்திற்கு வந்து அழகர் மலையானை நினைத்து
தியானஞ் செய்ய அங்கே எழுந்தருளிய திருமாலிருஞ்சோலை நின்றான் சுதபா
முனிவரின் வேண்டுகோளுக்கிணங்கி அங்கேயே இருந்து பக்தர்களின் பாவம்
போக்க நித்ய வாசம் செய்து