| வருகிறார். இத்தலம் காட்டழகர் கோவில் என்றும், காட்டழகர் சுந்தரராஜப் பெருமாள் கோவில் என்றும் அழைக்கப்படுகிறது. இந்தக் கோவிலின் முன்புறமுள்ள நூபுர கங்கையில் எப்போதும் தண்ணீர்வந்து கொண்டே இருக்கும். கடுமையான பஞ்ச காலத்திலும் இங்கு தண்ணீர் வரும். இந்த தண்ணீர் எங்கிருந்து வருகிறது என்பது தான் மிகவும் ஆச்சர்யமான விஷயமாகும். சுமார் 50 அடி அகலத்தில் கற்களால் தொட்டி கட்டி வைத்துள்ளனர். இங்கு பெருமாள் பூதேவி ஸ்ரீ தேவி சமேதராயிக் காட்சி தருகிறார். இத்தலம் மேற்கு தொடர்ச்சி மலையின் எழில் கொஞ்சும் செண்பகத் தோப்பு பகுதியில் உள்ளது. இங்கு செல்ல வேண்டுமெனில் செண்பகத்தோப்பு பகவதி நகர் வரை வாகனங்கள் செல்லும், அதன்பின் சுமார் 6கி.மீ. மலைப்பாதையில் நடந்து செல்ல வேண்டும். இப்பகுதியில் காட்டுயானைகள் அதிகம் வசித்தாலும் யாரையும் துன்புறுத்துவதில்லை. ஆண்டுதோறும் சித்ரா பௌர்ணமியன்று இங்கு மிக விசேஷமான திருவிழா நடைபெறும். 6 கால பூஜையும் விசேஷ அலங்காரங்களும் நிறைந்து இத்தலம் ஒளிமயமாய்த் திகழும். இவ்விழாவை ராஜபாளையும் பூசப்பாடி தாயாதியார் ராஜாக்களான பங்கார் ராஜாக்கள் வகையறாவினர். இத்திருவிழாவை சிறப்புற நடத்தி வருகின்றனர். இச்சமயம் இங்கு பெருங்கூட்டம் வரும். காரைக்குடி செட்டியார்கள் அதிகம் வருவர். பிறமாதங்களில் நடைபெறும் முக்கிய விழாக்கள் விசேடங்களின் போதும் இங்கும் கூட்டம் அதிகமாக வரும். 15. எம்பெருமானுக்கு பெரியாழ்வார் தொடுத்த பூமாலையைச் சூடிப்பார்த்து திருப்தியடைந்து கொடுத்தனுப்பி கொண்டிருந்தாள் ஆண்டாள். இதன் நினைவாக இன்றும் தினந்தோறும் முதல்நாள் இரவு ஆண்டாளுக்கு சாத்தப்பட்ட மலர் மாலை வடபத்திர சாயியாக பள்ளிகொண்டிருக்கும் பெருமாளுக்கு சிரசின் மேல் மறுநாள் காலை முதல்மாலையாக அணிவிக்கப்படுகின்றது. |