பக்கம் எண் :

526

     21. ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் அவதார தினமான ஆடி மாதம்
பூரநட்சத்திரத்தன்று நடைபெறும் திருவாடிப்பூரத் திருவிழாவும், ரத
உற்சவமும் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். அப்போது இங்கு நடைபெறும் 5
கருட சேவை வேறெங்கும் இல்லாததாகும் 5 கருட சேவையில் பங்கு பெரும்
எம்பெருமான்கள்.

     1. திருவண்ணாமலை (ஸ்ரீவில்லிபுத்தூருக்கு மருங்கமைந்த
       வெங்கிடாசலபதி பெருமாள்)
     2. திருத்தங்காலப்பன், திருத்தங்கல் பெருமாள்.
     3. வடபத்ரசாயி
     4. ரெங்கமன்னார்
     5. காட்டழகர் சுந்தரராஜன்

     22. திருக்கல்யாணத்தின்போது பெண்வீட்டாரான பெரியாழ்வாரின்
தற்போதுள்ள வாரிசினர் சந்நதிக்கு வந்துண்ண பெருமாள் “பரதேசம்” செல்ல
விருப்பதைத் தடுத்து மகளை மணங்கொள்ள பிரார்த்திக்க, அவ்விதமே
எம்பெருமான் ஏற்றுக்கொண்டதை “திருவுள்ளம் பற்றித் திருவுள்ளம்
ஆக்கினார்” என்று அறிவிக்கிறார்கள். இந்நிகழ்ச்சி இன்றும் நடைபெறக்கூடிய
தெய்வீகம் கமழும் இனிய நிகழ்ச்சியாகும்.

     23. ஸ்ரீதேவி, பூதேவி, நீளாதேவி, ஆகிய மூவரும் சேர்ந்தது
ஆண்டாளாகக் காட்சியளிப்பது இங்குதான், மற்ற தலங்களில் பெருமாள்
தம்பதி சமேதராய்க் காட்சி அளித்தால் (கல்யாண திருக்கோலத்தில்)
ஸ்ரீதேவியும், பூதேவியும் அருகிலிருப்பார்கள். இந்த தலத்தில்தான் ஆண்டாள்
ஒருவரோடு காட்சிதருகிறார். பெருமாளுக்கு வலப்புறத்தே ஆண்டாளும்,
இடப்புறத்தே கருடாழ்வாரும் காட்சியளிக்கின்றனர். இந்த அமைப்பும்
வேறெங்கும் இல்லாததாகும்.

     24. இங்கு திருமஞ்சனம் ஆகும்போது ஆண்டாளின் சன்னதிக்கு முன்பு
ஒரு காராம்பசு கொண்டு வரப்படுகிறது. தேவி காராம்பசுவைப் பார்த்துக்
கண்திறப்பதாக ஐதீகம். தட்டொளி என்னும் கண்ணாடியும் எதிரே பொருத்தப்
பட்டிருக்கிறது. இதற்குப் பிறகுதான் பிராட்டி முன்னிரவில் சூடிய மாலையைக்
கழற்றிக்கொடுக்க அதை, பெருமாள்