| அணிந்து கொண்டு கண்விழித்துப் பெருமாள் திருப்பள்ளி யெழுச்சியாகிறார். 25. இங்குள்ள திருமுக்குள தீர்த்தம் மிகவும் பிரசித்திவாய்ந்தது. காலநேமி என்னும் கொடிய அரக்கனை எம்பெருமான் தன் சக்ராயுதத்தால் அழித்தார். ரத்தம் தோய சக்கரத்தாழ்வார் வந்து எம்பெருமானிடம் நின்றவுடன் சக்கரத்தைத் தூய்மைப்படுத்த கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகளும் தமது தீர்த்தத்தை ஒரு குளத்தில் சொரிய, சக்கரம் சுத்திகரிக்கப்பட்டது. இந்த மூன்று நதிகளின் நீர் சேர்ந்ததால்தான் இதற்கு திருமுக்குளம் என்ற பெயர் உண்டாயிற்று என்பர். |