பக்கம் எண் :

529

ஒப்புவித்துவிட்டு காட்டில் தவமிருக்கச் சென்று அங்கிருந்த முனிவர்களிடம்
இப்பூவுலகில் மோட்சம் நல்கிடும் திருத்தலம் யாண்டு உளதென வினவ
திருத்தங்கல் பெருமையை அம்மன்னனிடம் கூறுமுகத்தான் அமைந்துள்ளது
புராண விளக்கம்.

     புரூரவச் சக்ரவர்த்தி இங்கு வருவதற்கு முன் இத்தலம் எங்ஙன
மேற்பட்டதென்பது பற்றி கீழ்க்கண்டவாறு பிரம்மாண்ட புராணம்
விளக்குகிறது.

     திருப்பாற்கடலில் ஓர் நாள், ஸ்ரீதேவி, பூமிதேவி, நீளாதேவி என்னும்
மூன்று பிராட்டிமார்களுக்குள் தம்மில் யார் பெரியவர் என்னும் பூசல்
உண்டாக ஸ்ரீதேவியின் தோழிகள், நீயே உலக ஈஸ்வரி எல்லா மக்களுக்கு
காரணி, இந்திரனும் ஸ்ரீயாலேயே பலம் பெறுகிறான், வேதங்களும் இவளையே
பரக்க பேசுகின்றன. பெருமாளுக்கும் இவளிடந்தான் பிரியம் அதிகம்.
எனவேதான் பெருமாள் ஸ்ரீயஃபதியாகவும், ஸ்ரீநிகேதனனாகவும், ஸ்ரீநிவாச
னாகவும் உள்ளான் என்றனர்.

     இதற்கு பூமாதேவியின் தோழிகள், பூதேவியே மிகவும் உயர்ந்தவள்.
எந்நிலையிலும் சாந்தம் உள்ளவள். பெருமாள் மாவலிச்சக்கரவர்த்தியிடம்
வாமன அவதாரங்கொண்டு இப்பூமாதேவியையே வேண்டினான். வராஹ
அவதாரத்திலும் பெருமாள் இவளைக் காக்கவே பிரியம் கொண்டார் என்றனர்.

     நீளாதேவியின் தோழிகள் நீளாவே உயர்ந்தவள். இவள் ரஸ ரூபம்.
எனவே இவளை முன்னிட்டே பெருமாளை “ரஸோவைஸ” என வேதங்கள்
புகழ்கின்றன. இவள் ஜல மயமானதாலே பெருமாளும் திருப்பாற்கடலில் பள்ளி
கொண்டார். வேதங்களில் இவள் உறைகிறாள். நீருக்கு நாரம் என்று பெயர்.
இவளை வைத்தே பெருமாளுக்கு நாராயணன் என்னும் பெயருண்டாயிற்று
என்றனர்.

     இவ்விதமாக விவாதம் வளர்ந்துகொண்டேயிருந்தது. ஸ்ரீதேவி
வைகுண்டத்தை விட்டுப் புறப்பட்டு தானே சிறந்தவள் என்று நிருபிப்பதன்
பொருட்டு தங்கால மலையென்னும் திருத்தங்காலில் வந்து தவமியற்ற
ஸ்ரீதேவியின் கடுந்தவத்தை மெச்சியும், பிரிவாற்றாமையைத் தீர்க்கும்
முகத்தானும் பெருமாள் காட்சியளித்து, நீயே சிறந்தவள் என்று போற்றி
ஏற்றுக்கொண்டார்.

     திருமகள் தங்கி தவமியற்றியதால் திருத்தங்கல் என்ற பெயர்
உண்டாயிற்றென்பர். இவ்விடத்திற்குத் தங்கால மலையென்னும் பெயருமுண்டு.