பக்கம் எண் :

539

     15. பெரியாழ்வார் திருமாலே பரமபதம் அளிக்கும் சக்தி வாய்ந்தவர்
என்று பரதத்துவ நிர்ணயம் செய்ததை பாண்டியன் கொண்டாட என்ற
பாடலால் அறியலாம்.

     16. வைகை நதி வேகமாக ஓடியதால் வேகவதி என்றொரு பெயரும்
உண்டு. விண்ணின்று வையம்நோக்கி வந்ததால் வையை என்றும் பெயர்
பெற்றதென்பர். இது இரு பிரிவாய்ப் பிரிந்து மதுரை நகருக்கு மாலையிட்டது
போல் வந்ததால் “கிருதமாலை” என்று இதனைப் புராணம் கூறும்

     வேகமாதலின் வேகவதி என்றும்
          மாகம் வாய்ந்ததனால் வையை என்றும் - தார்
     ஆகலால் கிருதமலையதாம் என்றும்
          நாகர் முப்பெயர் நாட்டு நதியரோ”

     17. இங்குள்ள பெருமாளை நெடுநீர் வையை பெருமாள் என்று சிலம்பு
செப்புகிறது. சிலம்பில் (சிலப்பதிகாரத்தில்) வரும் மாதுரி என்னும் இடைப்
பெண் ஆய்ச்சியர் குரவை முடிந்ததும் நெடுமாலைப் பூசிப்பதற்கு சென்றார்
என்பதை.

     ஆயர் முதுமகள் ஆடிய சாயலாள்
          பூவூம் புகையும் புனைசாந்தும் கண்ணியும்
     நடுநீர் வையை நெடுமால் அடியேத்தத்
          தூவித் துறை படியப் போயினாள்.

     என்று இளங்கோவடிகள் பகர்கிறார்.

     18. பெரியாழ்வார் பரதத்துவ நிர்ணயம் செய்தசபை இருந்த இடத்தை
மெய்காட்டும் பொட்டல் என்பர். அதுவே இன்று மேங்காட்டுப்பொட்டலாயிற்று.
இதனால் இன்றும் மாழ்கழி மாதத்தில் பகற்பத்து முதல் நாளில் கூடலழகர்
கருட வாகனத்தில் மேங்காட்டுப் பொட்டலுக்கு எழுந்தருள்கிறார்.

     19. மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்களால் இத்திருத்தலத்திற்கு
எண்ணற்ற திருப்பணிகள் செய்யப்பட்டது. இக்கோவிலில் உள்ள
கல்வெட்டுக்கள் 557,558,559, நாயக்க மன்னர்களின் திருப்பணியைப் பற்றித்
தெரிவிக்கிறது.

     20. ஸ்ரீ பாகவதம் 11வது அத்தியாயத்தில்,

     கிருதாதி ஷீ நராராஜன் கலாவிச் சந்தி
          மஹராஜ் திராவிடே ஷீ சபூவிச
     தாம்ரபர்ணீ நதியத்ர “க்ருதமாலா பயஸ்வநீ”

     என்ற பாடலில் தாமிரபரணியாற்றங்கரையிலும் கிருதமாலா நதி
தீரத்திலும் பெரும் பேருடன் விளங்கி