பக்கம் எண் :

541

91. திருமாலிருஞ்சோலையென்னும் அழகர் மலை

     சிந்துரச் செம்பொடி போல்
          திருமாலிருஞ் சோலையெங்கும்
     இந்திர கோபங்களே
          எழுந்தும் பரந்திட்டனவால்
     மந்தரம் நாட்டி யன்று
          மதுரக் கொழுஞ் சாறு கொண்ட
     சுந்தரத் தோளுடையான்
          சுழலையினின் றுய்துங் கொலோ
               (587) நாச்சியார் திருமொழி 9-1

     என்று ஸ்ரீஆண்டாளால் மங்களாசாசனம் செய்யப்பட்ட இத்தலம்
மதுரைக்கு வடக்கே 12 மைல் தொலைவில் எழிலார்ந்த மலையடிவாரத்தில்
அமைந்துள்ளது.

வரலாறு.

     இத்தலத்தைப் பற்றி வராக புராணம், பிரம்மாண்ட புராணம் ஆக்னேய
புராணம் போன்றன விவரித்துக் கூறுகின்றது. வராக புராணத்தில் ரிஷபாத்திரி
மகாத்மியும் என்னும் தலைப்பில் இத்தலம் பற்றி பரக்கப் பேசப்பட்டுள்ளது.
ரிஷபம் என்றால் காளை. இந்தமலையினைச் சுற்றியுள்ள மலைகள் யாவும்
பசுவினைப் போலவும் இந்த மலை மட்டுமே காளை போன்றும் தோன்றுவதால்
இதற்கு ரிஷபாத்திரி என்ற பெயர் ஏற்பட்டதென்பர்.

     மலய பர்வதம் எனப்படும் பொதியமலைக்கு வடக்கே 10 யோஜனை
தூரத்திலும், காவிரி நதிக்குத் தெற்கே 6 யோஜனைத் தூரத்திலும், வராக
பர்வதம் எனப்படும் பழனிக்கு கிழக்கே 6 யோஜனை தூரத்திலும்,
அமைந்துள்ளதாக எல்லைகள் குறிப்பிட்ட இப்பகுதியை கூடலூர் நாடு என்றும்,
மாலிருங் குன்றம் என்றும், திருமால் சோலை யென்றும் வனகிரி யென்றும்
தமிழ்மொழி பல பெயர்களைச் சூட்டுகின்றது. அதேபோல் இங்குள்ள உற்சவப்
பெருமாளுக்கும் அழகர் என்னும் வெகு அழகான சொல் வாய்த்துவிட்டது.

     மகாவிஷ்ணுவிற்கும், அவரது இராம கிருஷ்ண அவதாரங்களுக்கும்
அழகர் என்னும் சொல் சமஸ்கிருதத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இம்முறை
தமிழிலும் பின்பற்றப்