பட்டுள்ளது. மதுரையிலிருக்கும் எம்பெருமானுக்கு கூடலழகர் என்பதும் ஒரு திருநாமம். இவருக்கும் அழகர் கள்ளழகர் என்று திருநாமங்கள், குழலழகர், வாயழகர், கொப்பூழில் எழுகமலப் பூவழகர் என்பது ஆண்டாளின் மங்களாசாசனம். அச்சோ ஓரழகியவா என்பது திருமங்கை மன்னனின் மங்களாசாசனம். இக்கள்ளழகர் என்னும் சொல்லே வடமொழியில் சுந்தரராஜர் என்றாயிற்று. இந்த மாலிருங்குன்றத்தைப் பற்றி பரிபாடல் என்னும் சங்ககால நூல் பின்வருமாறு கூறுகிறது. தாங்கு நீணிலை யோங்கிருங் குன்றம் நாறிணாராத் தூழாயோ னல்கி னள்லதை ஏறுதலெளிதோ வீறுபெற துறக்கம் அரிதிற் பெறு துறக்க மாலிருங்குன்றம் என்றும் மாயோ னெத்தலின் னிலைத்தே சென்று தொழுகல் சீர் கண்டு பணிமனமே இருங் குன்றென்றும் பெயர் பரந்ததுவே பெருங்கலி ஞாலத்து தொன்றியல் புகழது -பரி பாடல் சிலப்பதிகாரமும் “தடம்பல கடந்து காடுடன் கழிந்து திருமால் குன்றம் செல்குவீராயின்” என்று திருமாலிருஞ்சோலையைக் குறிக்கிறது. | எமதர்மராஜன் விருஷபம் என்ற தரும ரூபத்தோடு தபசு செய்து இம்மலைக்கு விருஷபாத்ரி எனப் பெயரிடுமாறு பகவானை வேண்ட அவ்வண்ணமேயாயிற்றென்பர். தர்மத்திற்கு அதிபதியான தர்மதேவன் இங்கு ஸ்ரீமந் நாராயணனைக் குறித்து தவமிருந்து சுந்தரராஜனைத் தரிசித்து அதே திருக்கோலத்தை யாவருக்கும் காண்பிக்க இங்கேயே எழுந்தருளுமாறு வேண்டி நிற்க, அவ்வண்ணமே எழுந்தருளியதாகவும், உடனே தர்ம தேவன் விஷ்வகர்மாவை அழைத்து விமானம், கோபுரம், கோட்டை கொத்தளத்துடன் எம்பெருமானுக்கு கோவில் எழுப்புமாறு கேட்க, சந்திரனைப் போன்ற அழகு வாய்ந்த சோமச்சந்த விமானத்துடன் விஸ்வகர்மா இக்கோவிலை உருவாக்கினான் என்பது வரலாறு. எம்பெருமான் திரிவிக்ரம அவதாரம் எடுத்தபோது ஒரு பாதத்தால் உலகளந்துவிட்டு மறு பாதத்தால் விண்ணளக்க அது பிரம்மனின் சத்திய லோகம் வரை செல்ல பிரம்மன் தனது |