பக்கம் எண் :

544

தீர்த்தம்

     நூபுரகங்கை என்னும் சிலம்பாறு

ஸ்தலவிருட்சம்

     வ்ருஷபகிரி. சந்தன விருட்சம்

விமானம்

     ஸோம ஸந்த விமானம்

காட்சி கண்டவர்கள்

     மலயத்வஜ பாண்டியன், எமன், தர்மதேவதை.

சிறப்புக்கள்

     1. கிழக்கு மேற்காக 10 மைல் தூரமும், 1000 அடி உயரமும் உள்ள
இம்மலை எண்ணற்ற பூம்பொழில்களையும், பல சுனைகளையும், அரிய
மூலிகைகளையும் நிறைந்த குளிர்ச்சியினையும் கொண்டு திகழ்கிறது. இந்த
மலையில் ஆயிரம் தலைகள் உடைய ஆதிசேடன் வாழ்ந்து வருவதாக ஐதீகம்.
ஆயிரம் தலைகள் இருப்பதால் ஆயிரம் தடாகங்களும் ஆயிரம் பொழில்களும்
அவன் வாழ்வதற்கு வேண்டுமல்லவா? அதனால்தான்.
 

     “ஆயிரம் தோள் பரப்பி முடியாயிரம் மின்னிலக
          ஆயிரம் பைந்தலைய அனந்தசயனன் ஆளும்மலை
     ஆயிரம் யாறுகளுஞ் சுனைகள் பலவாயிரமும்
          ஆயிரம் பூம்பொழிலுமுடை மாலிருஞ்சோலையதே”

     என்று இந்த மாலிருஞ்சோலை மலையினை ஆழ்வார் மங்களாசாசனம்
செய்கிறார்.

     2. இம்மலையைத் திருமாலின் இருப்பிடமென்றும், இம்மலை நோக்கித்
தொழுவதை திருமாலைத் தொழுவதற்குச் சமம் எனக் கருதி மக்கள் இம்மலை
நோக்கித் தொழுதனர் என்று பரிபாடல் என்னும் தமிழிலக்கியம் கூறுகிறது.

     3. இங்கு பாயும் சிலம்பாறு என்னும் நூபுர கங்கையினை மிகவும்
புண்ணியமான நதியென்று புராணங்கள் வர்ணிக்கிறது. சிலப்பதிகாரமும் இந்தச்
சிலம்பாற்றைப் பற்றிச் சிலாகித்துப் பேசுகிறது. சிலம்பு செப்புகிறது.

     திருமாலைத் தரிசித்துவிட்டு திருவரங்கம் செல்லும் மாடலன் என்பான்
இந்த மலையில் அமைந்துள்ள மூன்று