பக்கம் எண் :

545

தீர்த்தங்களைப் பற்றி வழியில் சந்தித்த கோவலன், கண்ணகி கவுந்தி அடிகள்
ஆகியவரிடம் கூறுகிறான். இங்கிருந்து நீங்கள் இடப்பக்கமாக உள்ள
காட்டுவழியிற் சென்றால் திருமால் குன்றத்தை அடைவீர்கள். அங்கே ஒரு
சுரங்கவழி இருக்கிறது. அவ்வழியிற் சென்றால் மூன்று தீர்த்தங்களைக்
காணலாம். அவை புண்ணிய சிரவணம், பவகாரிணி, இட்டசித்தி என்பன.
புண்ய சிரவணத்தில் நீராடினால் இந்திரனால் எழுதப்பட்ட “ஐந்திர
வியாகரணம்” என்னும் நூலறிவை நீங்கள் பெறுவீர்கள். பவகாரிணியில்
மூழ்கினால் பழம் பிறப்பைப் பற்றிய அறிவுண்டாகும். இட்டசித்தியில்
நீராடினால் நினைத்ததெல்லாம் கைகூடும்.

     4. துவாதசி தினத்தில் இந்த நூபுர கங்கையில் நீராடுபவர்கள்
சகலவிதமான பாபங்களிலிருந்தும் விடுபட்டு விடுகிறார்கள். அதிலும் குறிப்பாக
ஐப்பசி மாதத்தின் வளர் பிறையில் வரக்கூடிய துவாதசியன்று நீராடக்
கூடியவர்கள் விஷ்ணு ஸாயுஜ்யம் எனச் சொல்லப்படும் மோட்சத்தை
அடைந்து விஷ்ணுவுக்குச் சமீபத்தில் இருக்கும் நிலையினைப் பெறுகின்றார்கள்.
 

     “அலங்கும் மருவியார்த்து திமிழ் பிழியச்
          சிலம்பாரணிந்த சீர்கெழு திருவிற்
     சோலையொடு தொடர்மலி மாலிருங் குன்றம்”

     - என்று சிலம்பாற்றைப் பற்றி பரிபாடல் கூறுகிறது. சிலம்பலாறுடை
மாலிருஞ்சோலை என்கிறார் திருமங்கை யாழ்வார்,

     சீர்சிறக்கு மேனி பசேலபசேலென
          நூபுரத்தினோசை கலீர் கலீரென
                      -என்கிறது திருப்புகழ்

     5. பெரியாழ்வார், ஸ்ரீ ஆண்டாள், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார்,
பேயாழ்வார், பூதத்தாழ்வார் ஆகிய 6 ஆழ்வார்களால் 123 பாக்களால்
பாமாலை சூடப்பட்ட மாண்புடைத்து இத்தலம். தந்தையும் மகளுமான ஒரு
வீட்டு ஆழ்வார்களான பெரியாழ்வாரும். ஆண்டாளும் இப்பெருமானிடம்
கொண்ட பக்தி பற்றி தனி நூல் ஒன்றே எழுதிவிடலாம்.

     6. திருப்புகழ் இத்தலத்தைப் பற்றிக் குறிப்பிடுகிறது. சங்க
இலக்கியங்களிலும் இம்மலை பேசப்பட்டுள்ளது. கந்த