பக்கம் எண் :

548

     11. பாண்டிய மன்னர்கள் பலர் இக்கோவிலுக்குப் பல திருப்பணிகள்
செய்துள்ளனர். பாண்டியர்கட்கு இராமாயண காலத்தில் கபாடபுரம் தலைநகர்,
மகாபாரதம் காலத்தில் மணலூர் தலைநகர். சங்கம் மருவிய காலம் முதல்
சமீப காலம் வரை மதுரை தலைநகரமாகவும் விளங்கியது. இப்பாண்டியர்களும்
பாரம்பர்யம் பாரம்பர்யமாய் பல்லவ மன்னர்களைப் போன்று விஷ்ணுவுக்குத்
தொண்டு செய்தவர்கள் ஆவர். திருமாலின் அவதாரங்களுள் முதன்மையும்
முக்கியத்துவமும் பெற்றதான மச்சாவதாரத்தின் ஞாபகமாகவே பாண்டியர்கள்
மீன் கொடியை தமது சின்னமாகத் தமது கொடியிலும் பொறித்தனர். பாண்டிய
மன்னன் வல்லப தேவன் காலத்தில்தான் மதுரையில் பல்லாண்டு விளைந்தது.

     பாண்டிய குல மன்னர்களுள் வாணர், அல்லது வானாதிராயர் என்ற
பெயருடையோர் சுமார் 500 ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சி பீடத்தை
அலங்கரித்தனர். அவர்களுள் மிகவும் முக்கியமானவர்கள் “திருமாலிருஞ்
சோலை நின்றான்” மகாபலி, வானாதிராயன், உறங்கா வில்லிதாசன்
ஆகியோராவர். இவர்களின் பெயர்களே இவர்கள் வைணவ ஈடுபாட்டில்
எத்துணையளவிற்கு சிறந்து விளங்கினர் என்பதைப் புலப்படுத்தும், இவர்களில்
சில வானதிராயர்கள் திருமாலிருஞ்சோலையைத் தலைநகரமாகக் கொண்டு
ஆண்டனர். பாண்டியர்கள் இத்தலத்தோடு தொடர்புற்றிருந்ததை.
 

     “.....கூர்வேல் கோனெடு
          மாறன் தென்கூடற் கோன்
     தென்னன் கொண்டாடிய தென்
     திருமாலிருஞ்சோலையே” - என்கிறார்.

     பெரியாழ்வார். இதனால் தொன்றுதொட்டு பாண்டியர்கள்
இப்பெருமானுக்கு தொண்டு பூண்டிருந்ததை அறியலாம்.

     12. ஸ்ரீ கள்ளழகருக்குரிய திருவிழாக்களில் மிகவும் முக்கியமானது
சித்திரை மாதப் பௌர்ணமி அன்று வர கூடிய சித்திரைத் திருவிழாவாகும்.
மதுரை மீனாட்சி கோவிலில் தொடங்கும் சித்திரைத் திருவிழாவும்,
இவ்விழாவும் ஒரே சமயத்தில் நடக்கின்றன. திருமலை