| நாயக்கர் மதுரையைத் தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி பொறுப்பு ஏற்கும் முன்னர் இவ்விருவிழாக்களும் வெவ்வேறு மாதங்களில் நடைபெற்றுவந்தன. அப்போது அழகரின் சைத்ரோத்ஸவம் சித்திரை மாதத்திலும் மீனாட்சி கோவில் உற்சவம் மாசி மாதத்திலும் நடைபெற்றது. இதனால் தான் மாசி மாதம் நடக்கும் திருவிழாவில் மீனாட்சிரதம் செல்லும் சாலைகள் (வீதிகள்) மாசி வீதிகள் என்றே அழைக்கப்பட்டன. திருமலை நாயக்க மன்னரின் ஆட்சிக்கு முன்பு ஸ்ரீ அழகர் சித்திரை மாதத்தில் அலங்காநல்லூர், தேனூர் வழியாக மதுரை வந்து வைகையில் இறங்கி வண்டியூரில் தங்கி மீண்டும் அழகர் மலையடைவது வழக்கம். திருமலை மன்னர் இந்த இரண்டு விழாக்களையும் ஒன்று சேர்த்தால் அது சிறப்பாக இருக்கும் என்று கருதியே இரண்டையும் ஒன்று சேர்த்தார். இதற்கு கூறப்படும் கதை தன் தங்கையான மீனாட்சியின் திருக்கல்யாணம் (திருமணம்) காண எம்பெருமான் மதுரைக்கு எழுந்துவரும் சமயம் எதிரில் பல மண்டபங்களில் தங்கி இளைப்பாறிவர (12 மைல் தொலைவல்லவா) இவர் வருவதையறிந்த மதுரை மக்கள் எதிர்கொண்டு வரவேற்க (சேவிக்க) செல்லும் வழக்கமே எதிர் சேவையாயிற்று. இந்நிகழ்ச்சிக்குப் புராதன ஆதாரமில்லை. சைவ வைணவ பேதம் நீங்கி ஒற்றுமை உண்டாகவே இப்படியொரு விழாவை உண்டாக்கினாரோ என்று கருத வேண்டியுள்ளது. 13. அழகர் குதிரை வாகனத்தில் வைகையை நோக்கிச் செல்லும் போது வைகையில் இறங்கும் முன் ஸ்ரீவில்லி புத்தூரிலிருந்து வரும் சூடிக் கொடுத்த ஆண்டாளின் மாலையைச் சூட்டிக் கொள்கிறார். இது ஆண்டு தோறும் தவறாது நடக்கும் நிகழ்ச்சி. ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து ஆண்டுதோறும் மாலையும் இங்கு வந்து சேர்கிறது. வைகையிறங்கியதும் ஸ்ரீவீரராகவப்பெருமாள் இவரை எதிர்கொண்டழைப்பார். இந்த திருவிழாவிற்கு தமிழகமெங்குமிருந்து லட்சோபலட்சம் பேர் குமுழுவதும், வேறெங்கும் இல்லாத நிகழ்ச்சியாகும். இந்நிகழ்ச்சியின் போது ராமராயர் மண்டபத்திற்கு அழகர் வந்துற்றதும் நடைபெறும் வாவேடிக்கை நிகழ்ச்சிகளும் பக்தர்கள் திரிஎடுத்துக்கொண்டு வண்ண உடைகளில் தம்மை |