20. இங்குள்ள சாளக்கிராம தரிசனமும், அதன் அபிஷேக தீர்த்தமும் பக்தர்கட்குத் தீர்த்தமாக்கப்படுவதுண்டு. 21. வைணவ மறுமலர்ச்சிக்கு தந்தையாக விளங்கிய கிருஷ்ண தேவராயர் தென்னாட்டு ஸ்தலங்களில் 90 ஸ்தலங்களில் கோபுரங்களை கட்டினார். இதில் பெரும்பான்மையான கோபுரங்கள் கட்டி முடிக்காமலேயே நின்று விட்டன. இவைகள் யாவும் ராயகோபுரம் என்றும், மொட்டைக் கோபுரம் என்றும் அழைக்கப்பட்டன. திருமாலிருஞ் சோலையில் ராயர் கோபுரம் உண்டு. திருவரங்கத்தில் கட்டி முடிக்கப்படாமல் இருந்த ராயகோபுரத்தைத்தான் ஸ்ரீ அஹோபில மடம் ஜீயர் ஸ்வாமிகள் கட்டி முடித்தார். கிருஷ்ணதேவராயர்தான் முதன்முதலில் இத்தலத்திற்கு சமயநல்லூர். சாந்த மங்கலம் ஆகிய கிராமங்களைத் தானமாக வழங்கினார். 22. கி.1757இல் ஹைதர் அலி இங்குள்ள கல்யாண மண்டபத்தை கொள்ளையிட்டு சுற்றியிருந்த மதில்களை சின்னாபின்னப் படுத்தினான். யூசுப்கான் என்னும் முகம்மதிய வீரன் ஹைதர் அலியை தோற்கடித்து திண்டுக்கல்லுக்கு விரட்டியபோது 1758இல் அவன் கள்ளழகர் கோவில் சொத்துக்களைத் திருப்பிக் கொடுத்து. பரிகாரமும் செய்து கொண்டான். 1801இல் இக்கோவில் ஆங்கில கலெக்டர்களின் பராமரிப்பின் கீழ் வந்தது. கலெக்டர் புஹார்ஸ் என்பவர் இக்கோவிலின் சொத்துக்களைத் தொகுத்து நிர்வாகத்தை வரைமுறைப்படுத்தி பரிபாலித்தார். 23. சுதபா என்னும் முனிவர் திருமாலிருஞ்சோலையில் தவமியற்றினார். ஒரு நாள் அவர் நீராடிக் கொண்டிருக்கும்போது துர்வாசரும் அவரது சீடர்களும் அங்கு வர இவர்களைக் கவனியாது சுதபா முனிவர் வெகுநேரம் நீரில் மூழ்கியிருந்ததால் துர்வாசருக்கு சினம் வந்துவிட்டது. என்னை மதியாது தண்ணீருக்குள்ளேயே கிடந்ததால் நீ தண்ணீரில் வாழும் தவளையாகக் கடவது (மண்டுகமாகக் கடவது) என்று துர்வாசர் சபித்தார். தனது நிலையுணர்ந்த சுதபன் முனிவர் துர்வாசரிடம் மன்னிப்பு வேண்டினார். மனங்கனிந்ததுர்வாசர் நீநாராயணன் நித்ய வாசம் செய்யும் வராக பர்வதம் சென்று அங்குள்ள தர்மாத்திரி என்று அழைக்கப்படும் பர்வதத்தில் சென்று |