பக்கம் எண் :

553

தவம் புரிக, எம்பெருமான் காட்சிகொடுத்ததும் உனக்கிட்ட சாபம் அகலும்
என்றார். அதற்கு சுதப முனிவர் நான் திருமாலிருஞ்சோலை நின்ற
சுந்தரராஜனையே நித்ய தரிசனம் செய்பவன். இப்பெருமானையே நான்
அங்கும் சென்று வழிபட வேண்டுமென நினைக்க, அவ்விதமே ஆகும் என்றார்
துர்வாசர். இவ்வாறு திருமாலிருஞ்சோலை சுந்தரராஜப் பெருமாள்
வராஹபர்வதத்தில் உள்ள தர்மாத்ரி என்னும் அழகிய பர்வதத்திற்கு
எழுந்தருளினார். இந்த அழகர் தான் இன்றைய காட்டழகர் திருக்கோவிலாகும்
(இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்தல வரலாற்றில் விரிவாகக் காணலாம்.)

     24. சித்தர்களில் ஒருவராகிய போகர் என்னும் முனிவர் சிலம்பாற்றைப்
பற்றியும், இம்மலையைப் பற்றியும் கூறியுள்ள பாடல்கள் ஆழ்ந்து
சிந்திக்கத்தக்கதாக உள்ளன.
 

     “காணப்பா வழுகணிச் சித்தருண்டு
          கமண்டல நீர் தொட்டியிலே வந்து பாயும்
     தோனப்பா பிள்ளைக ளொன்பது பேருண்டு
          துலங்கிடவே கன்னியொன்று அவர் பாலுண்டு
     பூணப்பா வதனடியிற் றெப்பமுண்டு
          புகழான திரவியங்கள் அநேக முண்டு
     மாணப்பா வழகர்மலை யென்று பேருமாச்சர்யம்
          நீலகிரிக் கதிகம் பாரே
     பாரே னென்றேனம் மலையினுயரஞ் சென்றால்
          பதிவான கருப்பானுட கோவி லொன்று
     நிரென்றேன் கோவிலுக்குத் தெற்கே சென்றால்
          நெடிய தொருபாறையொன்று சுனையொன்றுண்டு
     பேரென்றேன் வனம் வொன்று பெருத்துக் காணும்
          பெரிதாக குகையொன்று கதவுந் தோன்றும்
     சேரென்றே குகையுள்ளே சென்றே யானால்ச்
          செயமான வையப்பா இத்திருப்பத்தானே”

     என்று போகமுனிவர் தான் இயற்றிய ஜெனன சாகரம் என்னும் நூலில்
எடுத்தாண்டுள்ளார். இதில் சிலம்பு குறிக்கும் சிலம்பாற்றுடன் திரவியங்கள்