பக்கம் எண் :

560

இங்குள்ள ஆதிசேடனுக்குத் தங்க கவசங்கள் சாத்தப்பட்டுள்ளமை ஒரு
தனிச்சிறப்பாகும்.

     8. மிகவும் அழகான, அமைதியான கிராமத்தில் இயற்கை எழில்
கொஞ்சும் செந்நெல் வயல்களூடே காணப்படும் இத்தலம் உண்மையிலேயே
யாரையும் மோகிக்கச் செய்யும் என்பதில் ஐயமில்லை.

     9. சீராப்தி புஷ்கரணிக்கு கிழக்கில் ஒரு விருட்சம் (ஸ்தலமரம்)
இருக்கிறது. அவ்விருட்சம் ஆதியில் கிருதாயுகத்தில் திவ்ய விருட்சமாகவும்,
திரேதாயுகத்தில் வன்னி மரமாகவும், துவாபராயுகத்தில் வில்வமரமாகவும்,
கலியுகத்தில் அரசமரமாகவும் திகழ்கிறதென்று பிரம்மாண்ட புராணம்
கூறுகிறது.

     10. நம்மாழ்வாரால் பாடப்பட்ட தாளதாமரை ஏரியின் நீர்வளத்தால்
(வயல்கள் செரிந்து) ஊருக்கு அழகு செய்கிறது.

     11. திருமோகூர் பற்றி குறிப்பிடும் சங்ககாலப் பாடலொன்று இவ்வூரின்
தொன்மையை எடுத்தியம்பும்
 

          ....வேல் கொடித்
     துனைக்காலன்ன புனைதேர் கோசர்
          தொன் மூதலத்தரும் பனைப் பொறியில்
     இன்நிசை முரசங் கடிபிகுத் திரங்கத்
         தெம்முனை சிதைத்த ஞான்றை மோகூர்
     பணியாமைதிற் பகைதலை வந்த
          மாகெழுதானை வம்ப மோரியர்
                                -அகம் 251

     நந்தர்கள் மீது வெற்றி கொண்ட மௌரியர்கள் படையெடுப்பாளர்களாக
விளங்கி பெரியதோர் பேரரசை நிறுவினர். அவர்கள் தக்காணத்திலும்
தமிழகத்திலும் படையெடுத்து முன்னேறினர். மோகூரை முறியடித்தனர்.
பொதியமலைவரை சென்றனர்.

     -இப்பாடல் அகநானூற்றில் உள்ளது.

     சங்ககாலப் புலவர் மாமூலனார் பாடியது.